ஆப்கானிஸ்தான் அணிக்கு சோதனையான சாதனை

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 27.5 ஓவர்கள் மட்டுமே ஆடி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்து பாலோ ஆன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வருகிறது. அறிமுக டெஸ்டில் ஒரு இன்னிங்க்சில் குறைவான ஒவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகள் இழந்த அணி என்ற சாதனையை படைத்தது.

2017ம் ஆண்டு அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவிற்கு எதிராக 2018ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி எனவும் அறிவித்தது.

இதன் அடிப்படையில், தற்போது பெங்களூருவில், இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணி 457 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து ஆப்கான் வீரர்கள் பேட்டிங் செய்ய வந்தனர்.

துவக்க வீரர்கள் நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், அஹமது சாஷாத் தவறான முடிவால் ரன் அவுட் ஆனார். இதனை அடுத்து வந்த வீரர்கள் அனைவர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆக வெறும் 27.5 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் க்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில், அறிமுக டெஸ்ட் போட்டியில் ஒரு அணி பிடித்த குறைந்த பட்ச ஓவர்கள் இதுவாகும். இந்த மிக மோசமான சாதனை தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு சோந்தமாகியுள்ளது. மேலும், அறிமுக போட்டியில் ஒரு அணி எடுத்த குறைந்த 2வது ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு தென்னபிரிக்கா அணி 1889ம் ஆண்டு அறிமுக போட்டியில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

அறிமுக போட்டியில் குறைவான ஒவர்களில் ஆல் அவுட் ஆனவர்கள்..

1. ஆப்கானிஸ்தான்: 27.5 ஓவர்கள் (1 இன்னிங்ஸ்)
2. பங்களாதேஷ்: 46.3 ஓவர்கள் (2வது இன்னிங்ஸ்)
3. நியூசிலாந்து: 47.1 ஓவர்கள் (1 இன்னிங்ஸ்)
4. அயர்லாந்து: 47.2 ஓவர்கள் (1 இன்னிங்ஸ்)
5. பாகிஸ்தான்: 58.2 ஓவர்கள் (2வது இன்னிங்ஸ்)

Vignesh G:

This website uses cookies.