ஐபில் 2017: ஐபில் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரை அடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 132 என்ற சுலபமான இலக்கை துரத்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பெங்களூரு அணி, 49 ரன்னுக்கு சுருண்டது. இதனால் ஐபில் வரலாற்றில் குறைந்த பட்ச ஸ்கோரை அடித்தது பெங்களூரு அணி. இதற்கு முன்பு இந்த தேவையில்லாத சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைத்துக்கொண்டிருந்தது.
கவுதம் கம்பிர், வலுக்கொண்ட பேட்டிங் அணி பெங்களூரால் 132 அடிக்கவிடாமல், சிறப்பை அணியை வழிநடத்தினார். பெங்களூரு அணியும், இந்த போட்டியை மறந்து விட்டு,இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் பிலே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபில் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர் அடித்த அணிகளை இப்போது பார்க்கலாம்.
அணி | மொத்தம் | எதிரணி | வருடம் |
RCB | 49 | KKR | 2017 |
RR | 58 | RCB | 2009 |
KKR | 67MI | MI | 2008 |
RCB | 70 | RR | 2014 |
KTK | 74 | DC | 2011 |
CSK | 79 | MI | 2013 |
DD | 80 | SRH | 2013 |
RR | 81 | KKR | 2011 |
DC | 82 | RCB | 2010 |
RCB | 82 | KKR | 2008 |
DD | 83 | CSK | 2013 |
DD | 84 | CSK | 2014 |