சென்னை அணியின் தோல்விக்கு தோனி தான் காரணம்… முன்னாள் வீரர்கள் காட்டம் !!

கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்பும் தோனி அனைத்து விசயங்களிலும் தலையிடுவது சென்னை அணிக்கு பின்னடைவை கொடுப்பதாக முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரை மிக மோசமாக துவங்கியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 131 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்கள் குவித்த போதிலும், மோசமான பந்துவீச்சால் தோல்வியையே சந்தித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைவது இதுவே முதன்முறையாகவும்.

 

சென்னை அணியின் அடுத்தடுத்த இரண்டு தோல்விகள் கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தோல்வி குறித்து பேசும் முன்னாள் வீரர்கள் பலர், சென்னை அணியின் பந்துவீச்சாளர்களையே குறை சொல்லி வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜாவோ, தோனியும் சென்னை அணியின் தோல்விக்கு ஒரு காரணம் என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அஜய் ஜடேஜா பேசுகையில், “கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்பும் தோனி ஏன் அனைத்து விசயங்களிலும் தலையிடுகிறார் என தெரியவில்லை. லக்னோ அணிக்கு எதிரான போட்டி அரையிறுதி போட்டியை போன்று முக்கியமான போட்டியாக இருந்தால் கூட பராவாயில்லை, ஆனால் இது வெறும் இரண்டாவது போட்டி தான். தோனி மிக சிறந்த வீரர். நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன் தான், ஆனால் தோனி ஜடேஜாவின் கேப்டன்சியில் தலையிடுவது எனக்கு பிடிக்கவில்லை. ஜடேஜாவால் தனியாக எந்த முடிவும் எடுக்க முடிவது இல்லை, தோனி அனைத்து விசயங்களிலும் தலையிடுகிறார் அதனால் ஜடேஜாவிற்கு தான் கூடுதல் அழுத்தம், அதே போன் இது சென்னை அணிக்கும் எந்த பலனையும் அளிக்காது” என்று தெரிவித்தார்.

அஜய் ஜடேஜாவை போன்றே மற்றொரு முன்னாள் இந்திய வீரரான பார்த்தீவ் பட்டேலும், தோனி இது போன்று செயல்படுவது சரியல்ல, ஜடேஜா ஒரு சிறந்த கேப்டனாக வேண்டுமென்றால் அதற்கு அவர் சுதந்திரமாக சில முடிவுகள் எடுக்க வேண்டும், தவறுகளில் இருந்து மட்டுமே ஒருவர் தன்னை மாற்றி கொள்ள முடியும், எனவே தோனி ஜடேஜாவை சுதந்திர முடிவு எடுக்க விட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.