வெறும் 15 ரன்கள் போதும்… டி.20 போட்டிகளில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் தல தோனி !!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனி புதிய மைல்கல் ஒன்றை எட்டவுள்ளார்.

15வது ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

தங்களது முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இரு அணிகள் இடையேயான இந்த போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். குறிப்பாக கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி இந்த போட்டியில் எப்படி விளையாடுவார் என்பதை பார்க்கவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பாதைக்கு திரும்புவதை பார்க்கவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் தோனி அதிரடியாக விளையாட வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த போட்டியின் மூலம் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனி, புதிய மைல்கல் ஒன்றையும் எட்ட உள்ளார்.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி 15 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், தோனி டி.20 போட்டிகளில் தனது 7000வது ரன்னை பூர்த்தி செய்வார். இதன் மூலம் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அடுத்தபடியாக டி.20 போட்டிகளில் 7000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் வரிசையில் தோனி இடம்பிடிப்பார்.

டி.20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள் பட்டியல்;

விராட் கோலி – 10,326 ரன்கள்
ரோஹித் சர்மா – 9936 ரன்கள்
ஷிகர் தவான் – 8818 ரன்கள்
ராபின் உத்தப்பா – 7070 ரன்கள்
தோனி – 6985 ரன்கள்

Mohamed:

This website uses cookies.