வீடியோ; அவசரப்பட்டு தேவையே இல்லாமல் விக்கெட்டை பறிகொடுத்த ருத்துராஜ் கெய்க்வாட் !!

லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

15வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன.

மும்பையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு ராபின் உத்தப்பாவும், ருத்துராஜ் கெய்க்வாட்டும் துவக்க வீரராக களமிறங்கினர்.

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை ராபின் உத்தப்பா அசால்டாக துவம்சம் செய்து கொண்டிருந்த போது, ருத்துராஜ் கெய்க்வாட் (1) தேவையே இல்லாமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த மொய்ன் அலி – ராபின் உத்தப்பா ஜோடி லக்னோ அணியின் பந்துவீச்சை சிதறடித்து. ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். உத்தப்பா விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த சிவம் துபேவுடன் கூட்டணி சேர்ந்த மொய்ன் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் போட்டியின் 10.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 106 ரன்கள் குவித்துள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட் விக்கெட்டை இழந்த வீடியோ இங்கே;

Mohamed:

This website uses cookies.