நீங்க எல்லாம் அவுங்களுக்கு ஒரு மேட்டரே கிடையாது… அசால்டா அடிப்பாங்க; எலிமினேட்டர் போட்டியில் இந்த அணிக்கு தான் வெற்றி; டிவில்லியர்ஸ் உறுதி !!

நீங்க எல்லாம் அவுங்களுக்கு ஒரு மேட்டரே கிடையாது… அசால்டா அடிப்பாங்க; எலிமினேட்டர் போட்டியில் இந்த அணிக்கு தான் வெற்றி; டிவில்லியர்ஸ் உறுதி

லக்னோ – மும்பை இந்தியன்ஸ் இடையேயான எலிமினேட்டர் போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் குஜராத் – சென்னை இடையேயான முதல் குவாலிபயர் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் மும்பை – லக்னோ இடையேயான எலிமினேட்டர் போட்டி  இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இரண்டாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள வேண்டும்.

இந்தநிலையில், மும்பை – லக்னோ இடையேயான இந்த போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்தான தனது கணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து டிவில்லியர்ஸ் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இலகுவாக வெற்றி பெறும் என கருதுகிறேன். இரண்டு விசயங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருப்பதாக நான் பார்க்கிறேன், லீக் போட்டிகள் மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வளவு சொதப்பினாலும், நாக் அவுட் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி முற்றிலும் வேறுபட்ட ஆபத்தான அணி. நாக் அவுட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது சுலபம் இல்லை. இதனை நாம் கடந்த பல தொடர்களில் பார்த்துள்ளோம். அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று, அதே உத்வேகத்துடன் லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளது, இதுவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமான விசயம்” என்று தெரிவித்தார்.

 

Mohamed:

This website uses cookies.