சத்தியமா சொல்றேன்… இப்படி ஒரு சிக்ஸ் நான் பார்த்ததே இல்ல…. பாக்க போறதும் இல்ல; சூர்யகுமார் யாதவை புகழ்ந்து பேசிய டாம் மூடி !!

சத்தியமா சொல்றேன்… இப்படி ஒரு சிக்ஸ் நான் பார்த்ததே இல்ல…. பாக்க போறதும் இல்ல; சூர்யகுமார் யாதவை புகழ்ந்து பேசிய டாம் மூடி

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவை பிரபல பயிற்சியாளரான டாம் மூடி புகழ்ந்து பேசியுள்ளார்.

16வது ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.  மிரட்டல் நாயகனான சூர்யகுமார் யாதவ் வீடியோ கேம் போன்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 103* ரன்கள் எடுத்து கொடுத்தார்.

குஜராத் அணிக்கு எதிரான சூர்யகுமார் யாதவின் இந்த மிரட்டல் பேட்டிங், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருந்ததால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் சூர்யகுமார் யாதவை வெகுவாக புகழ்ந்து பேசி வருகின்றனர்.

அந்தவகையில், சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய பயிற்சியாளரான டாம் மூடி, சூர்யகுமார் யாதவின் பேட்டிங் திறனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இது குறித்து டாம் மூடி பேசுகையில், “பேட்டை நேராக வைத்து, தேர்ட் மேன் திசையில் சூர்யகுமார் யாதவ் அடித்த சிக்ஸரை நான் இதற்கு  முன் வேறு எங்கும் பார்ததே இல்லை. தேர்ட் மேன் திசையில் சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் தங்களது பேட்டை சற்று சாய்த்து தான் அடிப்பார்கள், அப்படி தான் அந்த ஷாட்டை அடிக்கவும் முடியும். ஆனால் சூர்யகுமார் யாதவ் பேட்டை நேராக வைத்தே சிக்ஸர் அடித்ததை என்னால் நம்பவே முடியவில்லை. என் வாழ்நாளில் இப்படி ஒரு ஷாட்டை நான் பார்த்தது கிடையாது. நிச்சயமாக சூர்யகுமார் யாதவை விட வேறு யாராலும் இது போன்று விளையாட முடியாது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.