தோனியின் ரன் அவுட் தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டத்தில் முக்கியமான நேரத்தில் தோனியை ரன் அவுட் செய்தார் மார்டின் குப்தில். அதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை.
இந்நிலையில், தோனியின் ரன் அவுட் குறித்து குப்தில் பேசியுள்ளார். “பந்து என்னிடம் வரும் என நான் நினைக்கவில்லை. என்னை நோக்கி வந்த பந்தினை முடிந்தவரை வேகமாக பிடித்தேன். பந்தினை பிடித்த உடனே நேராக ஸ்டம்பினை நோக்கி வீசினேன். அதிர்ஷ்டவசமாக அது நேராக சென்று ஸ்டம்பில் அடித்துவிட்டது. தோனி ஆட்டமிழந்தது எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்” என்றார் குப்தில்.
தோனியின் ரன் அவுட் குறித்து பல்வேறு செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஐசிசி கூட தோனியின் ரன் அவுட் தொடர்பாக டெர்மினேட்டர் வீடியோ ஒன்றினை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவினை எழுதியுள்ளார். அதில், “ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாட தவறிவிட்டோம். 30 நிமிட மோசமான ஆட்டம், உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பை பறித்துவிட்டது.
இதற்கு முன்பாக, கேப்டன் விராட் கோலியும் 45 நிமிட மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் என்று கூறியிருந்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் 648 ரன்கள் குவித்து ரோகித் சர்மா இதுவரை முதலிடத்தில் உள்ளார்வ்