மத்திய பிரதேசத்தில் பிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நமன் ஓஜா அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான நாமன் ஓஜா தனது கிரிக்கெட் வாழ்க்கையை 2000 தொடங்கினார்,
ரஞ்சி டிராபியில் அதிகமான முறை பேட்ஸ்மேன்களை அவுட் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்த நாமன் ஒஜா 141 முதல் தரப் போட்டிகளில் பங்கேற்று 9753 ரன்கள் அடித்துள்ளார் அதில் 22 சதங்களும் 55 அரை சதமும் அடங்கும் குறிப்பாக இவர் 219*ரன்களை அதிகபட்சமாக ஒரு போட்டியில் அடித்துள்ளார்,
மேடும் லிஸ்ட் ஏ போட்டிகளில் 143 போட்டிகளிலும் மேலும் 182 டி20 போட்டிகளில் விளையான்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் 113 போட்டிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று உள்ளார்.
டெல்லி டேர்டெவில்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் விளையாடிய நமன் ஓஜா 2012ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி டெல்லி டேர்டெவில்ஸ் விளையாண்டு அதிக ரன்கள் அடித்து பார்ட்னர்ஷிப் அமைத்த சாதனையை படைத்தார்.
2018 ஐபிஎல் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி நடைபெற்றது இதில் டெல்லி அணிக்காக விக்கெட் கீப்பர் செய்வதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டது, தனக்கு கொடுத்த வாய்ப்பை ஓஜா சரியாக பயன்படுத்தவில்லை,அதற்கு அடுத்தடுத்த போட்டிகளிலும் இவர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை.
2015 இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விருத்திமான் சஹா வுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது அதில் 56 ரன்கள் அடித்து அசத்தினார் மேலும் விக்கெட் கீப்பிங் கில் நாலு காட்சிகளும் ஒரு ஸ்டம்பிங் செய்து பாராட்டுகளைப் பெற்றார்.சர்வதேச போட்டிகளில் இவர் ஒரு டெஸ்ட் போட்டி ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது