கதை என்ன?
பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள உலக XI அணிக்கு முன்னாள் இலங்கை அணியின் கேப்டன் மஹேலா ஜெயவர்தனே கேப்டனாக செயல்படலாம் என தகவல்கள் வந்துள்ளன. மூன்று போட்டிகளும் லாஹூரில் உள்ள கடாபி மைதானத்தில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் கொடுத்த தகவலின் படி செப்டம்பர் 21, 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளது.
ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால்…
பாகிஸ்தானுக்கு உலக லவென் அணியை அனுப்பி கிரிக்கெட் போட்டி நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது
பாகிஸ்தானில் கடந்த 2009ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி விளையாட சென்ற இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் பலத்த காயமடைந்தனர். அதை தொடர்ந்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்த ஐசிசி தடை விதித்திருந்தது.
இந்த தடை முடிந்த பின்னரும் மற்ற நாடுகள் பாகிஸ்தானில் விளையாட மறுத்தன. கடந்த 2015ம் ஆண்டு ஜிம்பாப்வே மட்டும் அங்கு சென்று விளையாடியது.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற சாம்பியஸ் கோப்பை தொடரின் இறுதியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை வென்றது.
இந்த வெற்றிக்கு பின்னர் பாகிஸ்தானில் வந்து கிரிக்கெட் விளையாட மற்ற நாடுகள் முன்வர வேண்டும் என அவ்வணியின் கேப்டன் சர்பராஸ் அகமது கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கைக்கு பலனாக பாகிஸ்தானிற்கு உலக லவென் அணியை அனுப்பி மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இப்போட்டிகள் வருகிற செப்டம்பரில் நடைபெறலாம் என எதிர்பார்க்க படுகிறது.
அடுத்தது என்ன?
இலங்கை அணியின் கேப்டன் மஹேலா ஜெயவர்தனே கேப்டனாக செயல்படலாம் என தகவல்கள் வந்துள்ளன. மூன்று போட்டிகளும் லாஹூரில் உள்ள கடாபி மைதானத்தில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் கொடுத்த தகவலின் படி செப்டம்பர் 21, 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை இறுதி போட்டியில் தோற்கடித்து முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது பாகிஸ்தான். இந்த வெற்றிக்கு பிறகு அனைத்து முன்னணி அணிகளும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மத் கூறியிருந்தார்.
உலக XI அணிக்கு எதிராக விளையாட இருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று, எங்கள் வெற்றி பயணத்தை தொடருவோம் என பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.