அடுத்த ஐபிஎல் தொடருக்குள் எப்படியாவது தமிழ் கற்றுக்கொள்வேன்: மண்ணின் மைந்தன் தோனி

குண்டாறு அணைப்பகுதியில் உள்ள அருவியில் கிரிக்கெட் வீரர் தோனி குளித்து மகிழ்ந்தார்.

திருநெல்வேலி சங்கர் நகரில் நேற்று நடந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியைத் தொடங்கிவைக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வந்தார். முன்னதாக அவர், திருநெல்வேலியில் இருந்து காரில் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணைப்பகுதிக்கு சென்றார்.

அங்கிருந்து, கரடு முரடான மலைப் பாதையில் 20 நிமிடம் ஜீப்பில் பயணம் செய்து, அங்கு உள்ள தனியார் அருவிக்கு சென்றார். இயற்கை காட்சியை ரசித்தபடி பயணம் செய்த அவர், தனியார் அருவியில் குளித்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர், ஜீப்பில் குண்டாறு அணைப் பகுதிக்கு வந்து, காரில் திருநெல்வேலி சங்கர் நகருக்கு வந்தார்.

தோனி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குண்டாறு அணை அருகே தோனியை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.குண்டாறு அணை அருகில் இருந்து தனியார் அருவிக்கு ஜீப்பில் பயணம் செய்த தோனி.

 

அடுத்த ஐபிஎல் தொடருக்குள் நான் முடிந்த வரை நன்றாக தமிழில் பேச கற்றுக் கொண்டுவிடுவேன் என தல தோனி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் கோவை – மதுரை இடையேயான தமிழ்நாடு பிரீமியர் லீக் நடைபெற உள்ளது. இதனைத் தொடங்கி வைப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழகம் வந்தார்.

நெல்லைக்கு விமானம் மூலம் வந்த அவர், குண்டாறு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான அருவிக்குச் சென்றார். அவரது வருகையை அறிந்த அப்பகுதி ரசிகர்கள், ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

 

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை காண வந்த தோனி பேசியதாவது, “இங்கு நல்ல குளியல் முடித்து டிஎன்பிஎல் காண வந்துள்ளேன். ஒவ்வொரு முறை ஐபிஎல் போட்டித் தொடர் நடக்கும் போதும் சில தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்வேன். ஆனால் அது தொடர் முடிவதற்குள்ளாகவே மறந்து விடுகிறது.

மேலும் அவர் மைதானத்தில் வரும் போது பாட்ஷா தீம் இசையும், அவர் எடுத்துக் கொண்ட அட்டகாச புகைப்படம் வைரலாகி வருகின்றது.

Editor:

This website uses cookies.