இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தென்னிந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான சுமித்திரா குரூப் நிறுவனத்திற்கு தூதுவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரரும் முன்னாள் கேப்டனும் ஆன தோனி திறமை உலகம் அறிந்ததே. ஐசிசி நிர்வாகத்தின் அனைத்து கோப்பைகளையும் இந்திய அணிக்காக வென்று தந்துள்ளார். இதில் 2011 ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை மிக மூக்கையமானது.
36 வயதாகும் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் தனது கேப்டன் பொறுப்பையும் விட்டு அணி வீரராக விராத் கோலி தலைமையில் ஆடி வருகிறார். அவருக்கு முக்கிய தருணங்களில் அறிவுரையும் கூறி வருகிறார்.
தென்னிந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான சுமத்திரா க்ரூப் க்கு தூதுவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்க்கு அந்த நிறுவனத்தின் தலைவர் மதுசூதன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுசூதன் கூறுகையில், எங்களுக்கு மிகவும் பெருமை மிக்க தருணம் இது. தோனியை சுமத்திரா குடும்பத்திற்கு வரவேற்கிறோம். நாங்கள் தோனியுடன் இணைந்து பணிபுரிய பெருமை படுகிறோம் என தெரிவித்தார்.
தோனியின் திறமை, அமைதி, ஆர்வம், நம்பகத்தன்மை அனைவரும் அறிந்ததே. அவருடனான இந்த ஒப்பந்தம் எங்கள் நிறுவனத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் என கூறினார்.
இதற்க்கு தோனி கூறியதாவது, 20 வருடம் சிறப்பாக செயல் பட்டு வரும் நிறுவனத்துடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிறுவனத்துடன் தூதுவராக பணி புரிவது புது அனுபவத்தை தரும். நான் எப்போதும் எனக்கு நிம்மதியளிக்கும் நிறுவனத்தையும் பொருட்களையும் தான் தேர்வு செய்து பணிபுரிய விரும்புவேன். அதுபோல ஒன்று தான் இந்த சுமத்திரா நிறுவனமும் என கூறினார் தோனி.