தல தோனியால் வாட்சனுக்கு கிடைத்த மறு-வாழ்வு!!

தல தோனியா வாட்சனுக்கு கிடைத்த மறு-வாழ்வு!!

ஐபிஎல் ஏலத்தில் யாருமே சீண்டாத ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வாட்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுத்து, அவரை சூப்பர் பார்மிற்கு கொண்டு வந்து மறு வாழ்வு கொடுத்துளார் தல தோனி.

 

 

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சனின் ஒப்பந்தத்தை, சிட்னி தண்டர் அணி மேலும் 2 வருடத்துக்கு நீட்டித்துள்ளது..

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன். சர்வதேசப் போட்டிகளில் இருந்து 2015-ல் ஓய்வுபெற்ற இவர், டி20 லீக் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் லீக், ஐபிஎல், வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கரீபியன் லீக், பிக்பேஷ் டி20 தொடர்களில் விளையாடி வரும் அவருக்கு தற்போது 37 வயது!

Shane Watson of the Chennai Superkings plays a shot during the Final of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Chennai Super Kings and the Sunrisers Hyderabad held at the Wankhede Stadium in Mumbai on the 27th May 2018.
Photo by: Vipin Pawar /SPORTZPICS for BCCI

பிக்பேஷ் லீக் போட்டியில், சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக இருக்கும் வாட்சனின் பதவிகாலம் இந்த வருடத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் அவர் வேறு அணியில் இணைந்து விளையாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய அவர், இறுதி போட்டியில் 51 ரன்னில் சதம் அடித்து கோப்பையை வெல்ல உதவினார்.

 

இதையடுத்து, அவரது ஃபார்மை கணக்கில் கொண்டு சிட்னி தண்டர் அணி, அவரது ஒப்பந்தத்தை மேலும் 2 வருடத்துக்கு நீட்டித்துள்ளது. இதையடுத்து இன்னும் இரண்டு தொடர்களுக்கு அவர் கேப்டனாக செயல்படுவார். 

இதுபற்றி வாட்சன் கூறும்போது, ’சிட்னி தண்டர் அணியில் எனது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருப்பது உற்சாகமாக இருக்கிறது. பாகிஸ்தான் லீக், ஐபிஎல்- தொடர்களில் சிறப்பாக விளையாடினேன். இதனால் மகிழ்ச்சி. சிட்னி தண்டர் அணி, அடுத்த தலைமுறை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களையும் உருவாக்கி வருகிறது. எங்கள் அணியில் அதிகமான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அடுத்தத் தொடரில் எங்கள் அணி, இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இருக்கும்’ என்றார்.

Editor:

This website uses cookies.