அடுத்த உலகக்கோப்பைக்கு முன் இதை செய்தே தீருவேன்; ஹர்திக் பாண்டியா உறுதி !!

இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தனது இலக்கு என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாகவே முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடியாமல் திணறி வந்தார், இருந்தபோதும் இவர் மீது நம்பிக்கை வைத்து 2021 உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவிர்க்கு வாய்ப்பு அளித்தது, ஆனால் பாண்டியா அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.இவருடைய முழு பங்களிப்பும் இல்லாததன் காரணமாக இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இதனால் உலக கோப்பை தொடருக்குப் பின் தனது உடற் தகுதியை மேம்படுத்துவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதி பெற்ற பின்புதான் விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தற்பொழுது பரிபூரண குணம் அடைந்து விட்டார் என்று தகவல்கள் வெளியான பின்பும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணித் தேர்வாளர்கள் ஹர்திக் பாண்டியாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை,இவருக்கு பதில் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கொடுத்தனர்.

இருந்தபோதும் இவருடைய அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து 2022 ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணி தனது அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணித் தேர்வாளர்கள் ஹர்திக் பாண்டியாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற நிலையில்,ஹர்திக் பாண்டியா பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது தனது ஒரே இலக்கு என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், என்னுடைய ஒரே குறிக்கோள் என்னுடைய முழு திறமையையும் உலக கோப்பை தொடரில் காட்ட வேண்டும் என்பதுதான், என்னுடைய பயிற்சியும் முயற்சியும்,திட்டமும் உலக கோப்பை தொடரை மனதில் வைத்துக்கொண்டுதான் செய்கிறேன், எனது தாய் நாட்டிற்காக உலக கோப்பை தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு உள்ளேன், அதுதான் எனக்கு சந்தோஷத்தையும் பெருமையையும் அளிக்கும். என்று ஹர்திக் பண்டியா பேசியிருந்தார். மேலும் ஐபிஎல் தொடர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்காக ஒரு சிறந்த முன்னேற்பாடாக அமைந்துள்ளதாகவும் ஹர்திக் பாண்டியா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.