2020 டி20 உலகக்கோப்பைக்குப் பின்னர் ஓய்வு: மலிங்கா அறிவிப்பு!!

2020-ம் ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பை தொடருக்குப் பின்னர் தான் ஓய்வு பெற உள்ளதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க அறிவித்துள்ளார்.

உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டியிருப்பதால், ஐபிஎல் தொடரில் முதல் ஆறு ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரும் மும்பை இண்டியன்ஸ் அணி வீரருமான லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்

12 வது ஐபிஎல் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை – பெங்களூர் அணிகள் மோதுகின்றன. மும்பை இண்டியன்ஸ் அணியில் கடந்த தொடரில் பந்துவீச்சு ஆலோசகராக இருந்த மலிங்கா, இந்த தொடரில் விளையாட இருக்கிறார்.

இதற்கிடையே, உலகக் கோப்பைக்குத் தொடருக்கு வீரர்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றால், உள்ளூர் போட்டியில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அந்த நாட்டு வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால், உள்ளூரில் நடக்கும் ஒரு நாள் போட்டித் தொடரில் மலிங்கா விளையாட இருக்கிறார். அவர், காலே அணியின் கேப்டனாகவும் நிய மிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஐபிஎல் தொடரில் முதல் ஆறு போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக ஆட முடியாது என மலிங்கா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் விராத் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் சென்னையில் இன்று மோதுகின்றன.

முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணியும் மோதுகின்றன. சிஎஸ்கே அணியில். கடந்த தொடரில் அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன், கேப்டன் தோனி,  ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள். இந்த முறையும் இவர்களைத்தான் சிஎஸ்கே நம்பியிருக்கிறது. அதோடு கேதர் ஜாதவ் அணிக்கு திரும்பியிருப்பதும் பலம்.

பந்துவீச்சில், தென்னாப்பிரிக்காவின் நிகிடி காயம் காரணமாக விலகிவிட்டார். அதனால் இங்கிலாந்தின் டேவிட் வில்லே, மார்க் வுட், ஷர்துல் தாகூர், சாஹர், ஆல் ரவுண்டர் பிராவோ ஆகியோர் மிரட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். சுழல் பந்துவீச்சில் ஹர்பஜன், இம்ரான் தாஹிர், நியூசிலாந்தின் சன்ட்னர் என பலம் வாய்ந்த டீம் இருக்கிறது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வலுவான அணிதான். ஆனால், சென்னைக்கு எதிராக அந்த அணியின் ரெக்கார்ட் மோசமாகவே இருக்கிறது. இதுவரை 22 ஆட்டங்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் பெங்களூரு 7 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இருந்தாலும் டி20 போட்டியில் எதுவும் நடக்கலாம். அந்த அணியின் விராத் கோலி செம பார்மில் இருக்கிறார். டிவில்லியர்ஸ், ஹெட்மையர் உள்பட அதிரடியான வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.

Sathish Kumar:

This website uses cookies.