இப்போதைக்கு ஓய்வு இல்லை: யு டர்ன் அடித்த நட்சத்திர வீரர்! ரசிகர்கள் ஜாலி!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்குப்பின் ஓய்வு பெறுவேன் என்று தெரிவித்திருந்த மலிங்கா, தற்போது அதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. துல்லியமான யார்க்கர் பந்து வீச்சால் உலகளவில் புகழ் பெற்றார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 30 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார்.

கடந்த ஜூலை மாதம் 50 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக மலிங்கா கூறியிருந்தார்.

தற்போது அந்த கருத்தில் இருந்து பின்வாங்கி, மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்கள்தான் வீச வேண்டும். என்னுடைய திறமைக் கொண்டு என்னால் டி20 கிரிக்கெட் பந்து வீச்சாளராக செயல்பட முடியும் என்று உணர்கிறேன். உலகில் உள்ள ஏராளமான டி20-களில் நான் விளையாடி உள்ளேன். இதனால் இன்னும் இரண்டு ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாட முடியும்’’ .

Sri Lanka’s Isuru Udana (L) celebrates with Sri Lanka’s Lasith Malinga (C) the wicket of England’s James Vince for 14 runs during the 2019 Cricket World Cup group stage match between England and Sri Lanka at Headingley in Leeds, northern England, on June 21, 2019. (Photo by Dibyangshu SARKAR / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

டி20-யில் நான்கு ஓவர்கள் வீசினால் போதும். என்னிடமுள்ள திறமையைக் கொண்டு டி20 பந்துவீச்சாளராக என்னால் சமாளிக்க முடியும். உலகம் முழுக்க நடைபெறும் பல டி20 போட்டிகளில் கலந்துகொண்டுள்ளதால் ஒரு கேப்டனாக என்னால் மேலும் இரு ஆண்டுகள் விளையாட முடியும் என எண்ணுகிறேன். டி20 உலகக் கோப்பைக்கு நான் தான் கேப்டனாக இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்கள். ஆனால் இலங்கை கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறியுள்ளார்.

என்றார்.

30 டெஸ்டுகள் விளையாடிய பிறகு 2011 ஏப்ரலில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் மலிங்கா. பிறகு 226 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய பிறகு இந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையுடன் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் எனக் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.

Sathish Kumar:

This website uses cookies.