இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் தேவை!மல்லுக்கட்டும் மணிந்தேர் சிங்

விராட் கோலி கேப்டன் ஆனதிலிருந்து இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. குறிப்பாக ஆண்டாண்டு காலமாக இருந்த ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓரம்கட்டப்பட்டனர். இதில் ரவிச்சந்திரன் அஷ்வின் முற்றிலுமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிக் கொண்டிருக்கிறார். ரவீந்திர ஜடேஜா தனது ஆல்ரவுண்டர் திறமையை வைத்து ஒரு நாள் போட்டிகளிலும் டி20 போட்டியிலும் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.

ஆனால் சாகல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும்தான் விராட் கோலியின் முன்னணி தேர்வாக இருக்கிறார்கள். மேலும் நான்கு வருடத்திற்கு முன்னர் சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானான அணில் கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கும் விராட் கோலிக்கும் ஒத்து வராததால் தானாகவே முன்வந்து பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் அணில் கும்ளே. அதன் பின்னர் இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியாளர் என்று யாரும் இல்லை.

Kuldeep Yadav and Yuzvendra Chahal

அப்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியாளர் தேவை என்ற ஒரு குரல் எழுந்து கொண்டே தான் இருந்தது. ஒட்டுமொத்தமாக பந்து வீச்சிற்கு என்று பாரத் அருண் பயிற்சியாளராக இருந்தார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அந்த இடத்திற்கு தகுதியானவர் என்று பேச்சுகள் எழுந்து வந்தது அப்படியிருந்தும் அந்த இடத்திற்கு யாரையும் தற்போது வரை நியமிக்கவில்லை. இந்நிலையில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் மணிந்தேர் சிங் கண்டிப்பாக இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் தேவை என்று பேசியிருக்கிறார்.

Maninder singh

அவர் கூறுகையில் இளம் வீரர்களை வழி நடத்த வேண்டியது மீகவும் அவசியம் அதற்க்கு யாராவது அவர்களுடன் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள் என்பதற்காக தங்களுக்கு ஏற்றாற்போல் எப்போதும் செயல்பட முடியாது. இந்திய அணி வேகப்பந்து வீச்சில் மிகச் சிறப்பாக இருக்கிறது.

குல்தீப் யாதவ் ஒரு வேலையும் சரியாக பந்துவீச்சவில்லை என்றால் அப்போது மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை இதற்கு கண்டிப்பாக ஒரு சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் தேவை என்று தெரிவித்திருக்கிறார் மணிந்தேர் சிங்.

Prabhu Soundar:

This website uses cookies.