தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளை யாட இருக்கிறது. இதில், காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரின் பாதியில் இருந்து விலகிய விஜய் சங்கர் இடம்பிடித் துள்ளார். ஐபிஎல் தொடரில் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூரும் அழைக்கப்பட்டுள்ளார். முதல் 3 போட்டிக ளுக்கு மணீஷ் பாண்டேவும் அடுத்த 2 போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் கேப்டன்களாக செயல்படுகின்றனர்.
மேலும், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் புதிய விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அணி விவரம் (முதல் 3 போட்டி):
மணீஷ் பாண்டே (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், அன்மோப் பிரீத், ரிக்கி புய், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஷிவம் துபே, குணால் பாண்ட்யா, அக்ஷர் படேல், சாஹல், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், கலீல் அகமது, நிதீஷ் ராணா
கடைசி 2 போட்டி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சுப்மன் கில், பிரஷாந்த் சோப்ரா, அன்மோல்பிரீத் சிங், ரிக்கி புய், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, விஜய் சங்கர், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ராகுல் சாஹர், ஷர்துல் தாகூர், துஷார் தேஷ்பாண்டே, இஷான் பரோல்.
இந்நிலையில், வலைப்பயிற்சியில் உதவும் வகையில் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, விண்டீசில் இந்திய அணி வீரர்களுடன் தங்கி இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 26. விண்டீஸ் ‘டுவென்டி–20’ தொடரில் அறிமுகம் ஆனார். 3 போட்டியில் 5 விக்கெட் சாய்த்தார். விண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 6 ஓவர்கள் பந்து வீசினார்.
இவரை டெஸ்ட் அணிக்கு தயார் செய்யும் வகையில், வரும் டெஸ்ட் தொடர் முடியும் வரை இந்திய அணி வீரர்களுடன் தங்கியிருக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதி தந்தது. இதனால் வலைப் பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு பந்து வீசி உதவ காத்திருக்கிறார் சைனி.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘இந்திய வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் உதவும் வகையில் நவ்தீப் சைனி, விண்டீசில் தொடர்ந்து தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் முதல்தர டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். நல்ல வேகத்துடன் பந்தை வீசும் திறன் பெற்ற இவரை நன்கு பட்டை தீட்டும் பட்சத்தில், ‘ரிசர்வ்’ பவுலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்,’’ என்றார்.