இளம் வீரர்கள் சூழ 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு! மனீஷ் பாண்டே கேப்டன், ராகுல் துணை கேப்டன்!

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான கர்நாடக அணியின் கேப்டனாக மணிஷ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நாளை தொடங்குகிறது. ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகள் இதில் பங்கேற்கின்றன. தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணியில் மணிஷ் பாண்டே, கேஎல் ராகுல் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

நேற்றோடு டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததால் மணிஷ் பாண்டே மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் கர்நாடக அணிக்கு திரும்பியுள்ளனர். ரஞ்சி டிராபி தொடருக்கான கர்நாடக அணியின் கேப்டனாக மணிஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மணிஷ் பாண்டே, 2. கேல் ராகுல், 3. தேவ்தத் படிக்கல், 4. கேவி சித்தார்த், 5. பிரவின் டுபே, 6. பவன் தேஷ்பாண்டே, 7. அபிஷேக் ரெட்டி, 8. கிருஷ்ணப்பா கவுதம், 9. ஜெகதீஷ சுசித், 10. அபிமன்யு மிதுன், 11. பிரசித் கிருஷ்ணா, 12. ரோனித் மொரே, 13. ஷரத் ஸ்ரீனிவாஸ், 14. ஷ்ரேயாஸ் கோபால், 15. வி. கவுசிக்.

மேலும்,

தென்ஆப்பிரிக்கா தொடரில் விளையாடி வரும் தவான், டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வருபவர் ஷிகர் தவான். உலகக்கோப்பையில் ஏற்பட்ட காயம் சரியான பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறங்கினார்.

Indian cricketer Manish Pandey gestures after hitting the winning runs during the 1st and only T-20 cricket match between Sri Lanka and India at R Premadasa International cricket stadium in Colombo, Sri Lanka on Wednesday 6 September 2017 (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தற்போது தென்ஆப்பிரிக்கா தொடரில் விளையாடி வருகிறார். இன்றுடன் தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைகிறது.

இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டியில் தவான் விளையாடவில்லை என்பதால், செப்டம்பர் 24-ந்தேதி உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து தவான் கூறுகையில ‘‘நான் விஜய் ஹசாரே தொடரில் விளையாட இருக்கிறேன். அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எந்தவொரு கிரிக்கெட்டில் விளையாடினாலும், ஈடுபாட்டுடன் விளையாடுவேன். அது விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி அல்லது இந்திய அணியாக இருந்தாலும் சரி.

நான் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பதால் எனக்கு நேரம் கிடைக்கிறது. அதனால் வீட்டில் இருப்பது அல்லது பயிற்சி மேற்கொள்வதை விட, போட்டிகளில் விளையாடுவது என்னுடைய உறுதி மற்றும் திறமைக்கு சிறப்பானதாக இருக்கும். போட்டி பயிற்சி சிறந்த பயிற்சி. ஆகவே, இதை நான் சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன்.’’ என்றார்.வ்

Sathish Kumar:

This website uses cookies.