தமிழ் நடிகையை மணக்கப் போகும் மணீஸ் பண்டே: வெளியவந்த ரகசிய காதல்

விஜய் ஹசாரே போட்டியில் கர்நாடக அணியின் முக்கிய வீரராகவும், ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருபவர் மனிஷ் பாண்டே. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் ஒருவரான இவருக்கும், பிரபல தென்னிந்திய நடிகையான அஷ்ரிதா ஷெட்டிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஷ்ரிதா ஷெட்டி தமிழில் உதயம் NH4, இந்திரஜித், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் ஆகிய படத்தில் நடித்திருக்கிறார். மனிஷ்-அஷ்ரிதா இருவரும் ரகசியமாக காதலித்து வந்ததாகவும், வரும் டிசம்பர் 2-ம் தேதி இருவரின் திருமணமும் மும்பையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஹசாரே தொடருக்கான கர்நாடக அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. கர்நாடக அணியின் கேப்டனாக மனீஷ் பாண்டே…

விஜய் ஹசாரே தொடருக்கான கர்நாடக அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. கர்நாடக அணியின் கேப்டனாக மனீஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபி உள்ளிட்ட பல உள்நாட்டு தொடர்களில் கர்நாடக அணியின் கேப்டனாக ஏற்கனவே செயல்பட்டுள்ள மனீஷ் பாண்டே, இந்தியா ஏ அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட அனுபவம் கொண்டவர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஆடிய மனீஷ் பாண்டேவிற்கு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

கேஎல் ராகுல் கர்நாடக அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சொதப்பிவரும் ராகுல், டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்துள்ளார். எனவே மீண்டும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற விஜய் ஹசாரே தொடர் ராகுலுக்கு ஓர் அருமையான வாய்ப்பு.

கர்நாடக அணியில் கிருஷ்ணப்பா கௌதம், ஷ்ரேயாஸ் கோபால், பிரசித் கிருஷ்ணா ஆகிய ஐபிஎல் நாயகர்களும் உள்ளனர்.

கர்நாடக அணி:

மனீஷ் பாண்டே(கேப்டன்), கேஎல் ராகுல்(துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், கேவி சித்தார்த், பிரவீன் துபே, பவன் தேஷ்பாண்டே, அபிஷேக் ரெட்டி, கிருஷ்ணப்பா கௌதம், ஜெகதீஷ் சுசித், அபிமன்யூ மிதுன், பிரசித் கிருஷ்ணா, ரோனித் மோர், ஷரத் ஸ்ரீனிவாஸ்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் கோபால், வி கௌசிக்.

 

Sathish Kumar:

This website uses cookies.