பட்டையை கிளப்பும் இந்தியாவின் இளம் சிங்கங்கள்! 3 – 0 என அபாரம்!

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான போட்டியில், மணீஷ் பாண்டே, குணால் பாண்ட்யா ஆகியோரின் சிறப்பான ஆட்டத் தால் இந்திய ஏ அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

மணீஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு ஏ அணியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. அதிகாரப்பூர்வமற்ற இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்ற நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது.

டாஸ் வென்ற இந்திய ஏ அணி, முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, சுப்மான் கில், அன்மோல் பிரீத் சிங் களமிறங்கினர். நான்கு பந்துகளை சந்தித்து, சிங் ஆட்டமிழக்க, அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் வந்தார். அவரும் கில்லும் இணைந்து சிறப்பாக ஆடினர். ஐயர், 47 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்ததும் கேப்டன் மணிஷ் பாண்டே இறங்கினார். கில்லும் பாண்டேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 81 பந்தில் 77 ரன் சேர்த்த கில், தனது விக்கெட்டை பறிகொடுத்து திரும்பினார். அடுத்த விஹாரி 29 ரன்னிலும் இஷான் கிஷான் 24, குணால் பாண்ட்யா 2, வாஷிங்டன் சுந்தர் 3 ரன்னிலும் ஆட்டமிழக்க, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய ஏ அணி, 295 ரன் குவித்தது. அபாரமாக ஆடிய கேப்டன் மணிஷ் பாண்டே 87 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் சதமடித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய, சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. அதிகப்பட்சமாக கீமா பால் 34 ரன்னும் தொடக்க ஆட்டக்காரர் அம்பரிஸ் 30 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து அந்த அணி, 34.2 ஓவரில் 147 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

India A had won the first two unofficial ODIs by 65 runs each on both instances. The fourth and fifth unofficial matches will be played on 19 July and 21 July in Coolidge.

இந்திய தரப்பில் குணால் பாண்ட்யா 5 விக்கெட்டும் விஹாரி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், 3-0 என்ற நிலையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது

Sathish Kumar:

This website uses cookies.