என்னால் இன்னும் எவ்வளவு நாள் தக்குப்பிடிக்கமுடியும் என்று தெரியவில்லை: முன்னாள் வீரருக்கு நேர்ந்த சோகம்

தன்னிடம் வேலை செய்யும் நபர்களுக்கு எவ்வளவு நாட்கள் சம்பளம் கொடுக்க முடியும் என்று உறுதியாகத் தெரியவில்லை என மனோஜ் பிரபாகர் தனத கவலையை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விளையாட்டுகள், தொழில்கள், பொருளாதாரம் என ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சிறுகுறு தொழில்கள் நடத்துபவர்கள் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சில தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மனோஜ் பிரபாகர் அழகு பொருட்கள் தயாரிப்பது தொடர்பான தொழில் செய்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் தொழில் பாதித்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘என்னுடைய தொழிற்சாலை ஊழியர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியும். தொழிற்சாலையின் அருகில்தான் நான் வசித்து வருகிறேன். இதனால் என்னால் அவர்களுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அதை செய்து வருகிறேன். சம்பளம், சாப்பாடு உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறேன். எவ்வளவு நாள் இதை சரியாக செய்ய முடியும் என்பதை உறுதியாக கூற முடியவில்லை’’ என்றார்.

மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:- கொரோனாவுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வகையில் நாடு முழுவதும் 755 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1334 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,712 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 519 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 2301 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியின் மாஹே மற்றும் கர்நாடகாவின் குடகுவில் கடந்த 28 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு கிடையாது. மற்ற பகுதியில் தளர்வு இருக்கும்.
கடந்த 14 நாட்களில், 23 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை” என்றார்.

ஐசிஎம்ஆர் தரப்பில் ராமன் ஆர் கங்கா கேத்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, இந்தியாவில் இதுவரை 3,86,791 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 37,173 பரிசோதனைகள் நடந்துள்ளது. அதில், 39,287 பரிசோதனைகள் ஐசிஎம்ஆர் ஆய்வகத்திலும், 7,886 பரிசோதனைகள் தனியார் ஆய்வகத்திலும் நடந்தது” என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.