2வது போட்டியில் முக்கிய வீரர் விலகல்? காரணம் இது தான்!

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாயினிஸ் விளையாடுவது சந்தேகம் என அதன் அணி நிர்வாகத்திடம் இருந்து தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸி., பின்ச் மற்றும் ஸ்மித் இருவரும் சதம் விளாசினர். வார்னர் அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு முக்கிய ஆல்ரவுண்டர்களான மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டாலின் இருவரும் களம் கண்ட நேரத்தில் ஸ்டாய்னிஸ் பேட்டிங்கில் வந்த முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். ஆனால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஆறு ஓவர்களுக்கு 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.

ஏழாவது ஓவரில் முதல் இரண்டு பந்து வீசிய பிறகு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக வெளியேறினார். அன்று இரவு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் காயம் சற்று தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டிக்குள் அவர் குணமடைந்து அணிக்கு திரும்ப முடியாது என மருத்துவக்குழு தெரிவித்ததாக தகவல்கள் வருகின்றன.

இதனால் ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்ப இருவரின் பெயர்கள் தற்போது பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. முதலாவதாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் என்பவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இரண்டாவதாக மார்க்கஸ் ஹென்ரிகுஸ் பெயர் இடம் பெற்றிருக்கிறது. இவர் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு அவரால் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. உள்ளூர் டி20 போட்டிகளிலேயே விளையாடி வருகிறார். அவர் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் அவரது பெயரும் இதற்கு அடிப்பட்டு வருகின்றது.

ஒருநாள் தொடர் துவங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் செயல்பாடு குறித்து பேசி இருந்தார். அதனால் பெரும்பாலும் அவரையே அணியில் எடுத்து வருவார்கள் என தெரிகிறது.

Mohamed:

This website uses cookies.