தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் மார்க் பவுச்சர் கோச்

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் மார்க் பவுச்சர் கோச்

தென்னாப்பிரிக்கவின் வரும் அக்டோபர் மாதம் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.பில் போன்ற ஒரு டி20 லீக் நடக்க உள்ளது. தற்போது  அடுத்ததுது அந்த லீக்கில் பங்கேற்க்கும் அணிகள் மற்றும் பயிற்சியாளர் விளம்பர தூதகர் என ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றனர். துபாய் தொழில் அதிபர் அஜய் சேத்தி கேப் டவுன் நகரை மையமாக வைத்து ஒரு அணியை கட்டமைத்து வருகிறார். மேலும் அந்த அணிக்கு நெல்சன் மண்டேலா பே ஸ்டார்ஸ் என பெயர் வைத்துள்ளார்.

அந்த அணியின் பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மார்க் பவுச்சரை நியமைத்துள்ளனர். மேலும், அந்த அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் செயல்படுவார் என அறிவித்துள்ளனர். அந்த அணிக்கு துணை பயிற்சியாளராக மபிலிபோங்க்வா மகேடா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CAPE TOWN, SOUTH AFRICA – JANUARY 17: Head coach Gary Kirsten (L) and Mark Boucher attend the South African national cricket team nets session and press conference at Claremont Cricket Club on January 17, 2013 in Cape Town, South Africa. (Photo by Grant Pitcher/Gallo Images/Getty Images)

முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளார் மக்காயா நிடினி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிளைவ் ல்லாய்ட் அந்த அணிக்கு விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் மகன் ரோகன் கவாஸ்கர் அந்த அணிக்கு ஊடகவியில் இயக்குனராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியின் பங்குதாரார் அஜய் சேத்தி அணியை பற்றி கூறும் போது,

மண்டேலாவின் வழிமுறைகளை பின்பற்றும் ஒரு அணியை அமைக்க முடிவு செய்து தான் இந்த அணிக்கு மண்டேலாவின் பெயரை வைத்தோம். இந்த அணி மண்டேலாவின் கொள்கைக்காக உருவாக்கப்பட்டது.

Editor:

This website uses cookies.