ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகிய மிக முக்கிய வீரர் !!

ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகிய மிக முக்கிய வீரர்

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சீனியர் வீரரான அமித் மிஷ்ரா விலகியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13வது சீசன் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது.

நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இரு அணிகள் இடையேயான இன்றைய போட்டிக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், டெல்லி ரசிகர்களுக்கு அதிர்சி தரக்கூடிய செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.

டெல்லி அணியில் இருக்கும் சீனியர் வீரர்களில் மிக முக்கியமானவரான சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அமித் மிஷ்ரா இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக ஆங்கில் ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொல்கத்தா அணியுடனான போட்டியின் போது கை விரலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக, அந்த போட்டியில் வெறும் இரண்டு ஓவர்களை மட்டுமே அமித் மிஸ்ரா வீசினார், காயத்தின் தன்மையை கண்டறிந்த மருத்துவகுழு அமித் மிஸ்ராவிற்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியதன் பேரிலேயே அமித் மிஸ்ரா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமித் மிஸ்ரா விலகியுள்ளது நிச்சயம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான டெல்லி அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ஷிகர் தவான், ரஹானே/பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்ட்ஜே.

 

Mohamed:

This website uses cookies.