இங்கிலாந்து அணியின் விராட் கோலி இவர் தான்… இளம் வீரரை புகழ்ந்து பேசிய பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ஹாரி புரூக்கை இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலியுடன் பென் ஸ்டோக்ஸ் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
2022 ஜனவரி மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணியில் அறிமுகமான ஹாரி புரூக், தன்னுடைய முதல் போட்டியிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து கிரிக்கெட் வட்டத்தில் பேசி பொருளாக திகழ்ந்தார்.
குறிப்பாக தற்பொழுது நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு சதங்களை பதிவு செய்த ஹாரி புரூக்., பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்துவதற்கு மிகப்பெரும் உதவியாக திகழ்ந்துள்ளார்.
இதன் காரணமாக ஹாரி புரூக்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.மேலும் இவருக்கு அதிகப்படியான வாய்ப்புகளை இங்கிலாந்து அணி வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 23 வயதே ஆகும் ஹாரி புரூக் கிட்டத்தட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி போன்று விளையாடுகிறார் என ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் பேசுகையில்,“கடந்தாண்டு தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை துவங்கிய ஹாரி புரூக் ,அதே ஆண்டு முடிவடைவதற்குள் பல பெரிய விஷயங்களை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவருடைய ஆட்டம் மிகப் பிரமாதமாக இருந்தது, மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்படும் சில அரியவகை வீரர்களில் ஹாரி புரூக்கும் ஒருவர். இவர் நிச்சயம் எங்கு சென்றாலும் வெற்றியை பெறுவார். கிட்டத்தட்ட இவருடைய ஒவ்வொரு ஷாட்டும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஷாட்டுக்கு நிகராக உள்ளது, விராட் கோலியின் ஒவ்வொரு ஷாட்டும் மிக எளிமையானதாக இருக்கும் ஆனால் அது சிறப்பாக வேலையும் செய்யும் ”என பென்ஸ்டோக்ஸ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.