கடைசி பந்து வரை திக் திக்… கடுமையாக போராடிய நியூசிலாந்து வீரர்கள்; மிரட்டல் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா !!

கடைசி பந்து வரை திக் திக்… கடுமையாக போராடிய நியூசிலாந்து வீரர்கள்; மிரட்டல் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 27வது போட்டியில் நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின.

தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டர்வீஸ் ஹெட் 109 ரன்களும், டேவிட் வார்னர் 81 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 388 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கிளன் பில்ப்ஸ் மற்றும் டிரண்ட் பவுல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணியும் பேட்டிங்கில் மிக மிக சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் 23வயது இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா கடந்த போட்டிகளை போன்று இந்த போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 89 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து கொடுத்தார். சீனியர் வீரரான டேரியல் மிட்செல் 54 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொதப்பினாலும், ஜிம்மி நீஷமின் போராட்டத்தின் மூலம் கடைசி நேரத்தில் போட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையை நியூசிலாந்து அணி சந்தித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு தனி ஆளாக தோல்வி பயத்தை காட்டிய ஜிம்மி நீஷம் கடைசி ஓவரின் 5வது பந்தில் 2 ரன் ஓட முயன்று ரன் அவுட்டானதால் கடைசி பந்தில் நியூசிலாந்து அணியை கெத்தாக வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியும் பெற்றது.

பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.