உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணி, இன்று தென்னாப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது.
ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வரும் 12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் , இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகள் இடையிலான போட்டி சவுதாம்ப்டன் நகரில் இன்று நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் ஆயத்தமாகி வருகிறது. அனுபவ வீரர்கள் தோனி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் , லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு கை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அசத்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. பந்துவீச்சில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரை நம்பி களம் காண்கிறது இந்திய அணி.
டூப்ளஸ்சி தலைமையிலான தென்னாப்ரிக்க அணி, நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளிடம் தோல்வியடைந்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயத்தால் தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, உலகக் கோப்பை தொடரை சிறப்பு மிக்க வகையில் தொடங்கவில்லை. அந்த அணி இங்கிலாந்து, வங்கதேச அணிகளிடம் தோல்வியடைந்த நிலையில் இன்றையஆட்டத்தை சந்திக்கிறது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்துள்ளது அணியை பலவீனப்படுத்தி உள்ள நிலையில் அணியின் பேட்டிங்கும் கடும் சரிவை சந்திப்பது கேப்டன் டு பிளெஸ்ஸிஸுக்கு பெரிய தலைவலியை உருவாக்கி உள்ளது.
வேகத்தை குறைத்து வீசும் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் கையாளும் மோசமான யுத்திகள் இரு ஆட்டங்களிலும் அம்பலமானது. தரம் வாய்ந்த இரு சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் 20 ஓவர்களை தென் ஆப்பிரிக்க அணி கையாள்வது என்பது கடினமான செயலாக மாறியுள்ளது. இதனால் இன்றையஆட்டத்தில் யுவேந்திர சாஹல், குல்தீப்யாதவ் ஜோடி கடும் சவால்கள் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது நடைபெற்ற 6 ஆட்டங்களில் குல்தீப் யாதவ் 17 விக்கெட்களையும், யுவேந்திர சாஹல் 16 விக்கெட்களையும் வேட்டையாடிஇருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேகப் பந்து வீச்சில் முன்னணி வீரரான லுங்கி நிகிடி, தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகள் இதுவரை 83 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாப்ரிக்க அணி 46 போட்டிகளிலும், இந்திய அணி 34 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர தென்னாப்ரிக்காவும், வெற்றியுடன் தொடங்க இந்தியாவும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
உலகக் கோப்பையில் (4 போட்டிகள்): இந்தியா ஒரு போட்டியிலும், தென் ஆப்ரிக்கா 3 ODI போட்டியிலும் வென்றுள்ளது
கடந்த பத்து போட்டிகளில் இந்தியா 7 ஒருநாள் போட்டிகளில் வென்றது. தென் ஆப்ரிக்கா 3 ODIகள் வென்றது