இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது.
இந்த டெஸ்டை டிரா செய்தால் விஸ்டன் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி தக்கவைத்துக் கொள்ளும்.
இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை 2-1 என வென்றுவிடும். அயர்லாந்துடனான ஒரு டெஸ்ட் தொடரைத் தவிர்த்துப் பார்த்தால் கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் மட்டும் தான் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. அதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி மிக முக்கியமானதாக உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி இதற்கு முன்னதாக கடைசி நாளில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய போது 5 முறை தோல்வியை சந்தித்துள்ளது. 1963 – இங்கிலாந்து அணிக்கு எதிராக 2001/02 – இலங்கை அணிக்கு எதிராக 2009 – வங்கதேச அணிக்கு எதிரா 2014 – நியூசிலாந்து அணிக்கு எதிராக 2016 – இந்திய அணிக்கு எதிராக
இதேபோல் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த அணி வெற்றி பெற்றதே இல்லை.
தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. அப்படி இருக்க இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று அந்த எண்ணத்தை மாற்றுமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் செய்த தவறுகளை இரண்டாவது டெஸ்டில் சரி செய்து கொண்டது. பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்ஸில் 176 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 78 ரன்களும் அடித்தார். இதேபோல் டொமினிக் சிப்லே அதிரடியாக விளையாடி முதல் இன்னிங்சில் 120 ரன்கள் அடித்தார்.
அதே நேரத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் நம்மால் சரியாக கணிக்க முடியாது. அவர்கள் சவுத்தாம்ப்டனில் சிறப்பாக விளையாடினர், ஆனால் அடுத்த டெஸ்டில் பேட்டிங், பந்துவீச்சில் அதே நிலைத்தன்மையை அவர்களால் பராமரிக்க முடியவில்லை.
இங்கிலாந்து அணி வீரர்கள் – ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், டொமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, சாம் குர்ரான், ஒல்லி போப், டொமினில் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்