மேத்யூ ஹைடன் என்னிடம் மூன்று வருடங்கள் பேசவில்லை – வருதத்துடன் கூறிய ராபின் உத்தப்பா
ஆரம்ப காலகட்டங்களில் குறிப்பாக 2003-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நிறைய காரசாரமான விஷயங்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஒரு சம்பவத்தை ராபின் உத்தப்பா தற்போது நினைவுபடுத்திக் கூறியுள்ளார்.
2007ஆம் ஆண்டு நடந்த ஒரு டி20 போட்டியில் தான் மேத்யூ ஹைடனை ஸ்லெட்ஜ் செய்ததால், அவர் தன்னிடம் 2-3 வருடங்கள் பேசவில்லை என்று தற்பொழுது ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
2007ஆம் ஆண்டு நடந்த சம்பவம்
2007ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை டி20 தொடர் நடைபெற்றது அந்த தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிக்கொண்டன. அந்தப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி வெல்லும் என்று அனைவரும் கருதினர். ஆனால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கி அரையிறுதி எதிலும் வெற்றி பெற்று மேலும் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று முதல் உலகக் கோப்பை டி20 தொடரை வென்ற கேப்டனாக வலம் வந்தார் அது நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அந்த டி20தொடர் போட்டி நடந்த முடிந்த சில வாரங்களில், ஒரு டி20 மற்றும் 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அந்தப் போட்டித் தொடரில் பல வேடிக்கையான விஷயங்கள் நடைபெற்றன. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் இந்திய அணி வீரர்களை ஸ்லெட்ஜ் சரி நான் பதிலுக்கு இந்திய அணி வீரர்களும் ஆஸ்திரேலிய வீரர்களை ஸ்லெட்ஜ் செய்தனர்.
மேத்யூ ஹைடன் இடம் ஸ்லெட்ஜிங் செய்த ராபின் உத்தப்பா
2006 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை ராபின் உத்தப்பா அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிக அற்புதமாக விளையாடிய ஆண்டுகள். ஒரு கட்டத்தில் இந்திய அணி வீரர்கள் விளையாடும் வேலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் தன்னிடம் மற்றும் தன் அணியினரிடமும் ஸ்லெட்ஜ் செய்ததாக கூறியுள்ளார். பதிலுக்குத் தானும் ஸ்லெட்ஜ் செய்ய அப்பொழுது முடிவெடுத்துள்ளதாகவும் கூறிய ராபின் உத்தப்பா, தான் அதிகமாக விரும்பும் மேத்யூ ஹெய்டன் இடம் ஸ்லெட்ஜ் செய்ததை பற்றியும் கூறியுள்ளார்.
மேத்யூ ஹைடன் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்பது ராபின் உத்தப்பா கூறியுள்ளார். பல கிரிக்கெட் ஷாட்களை அவள் அமிர்த தான் நான் கற்றுக் கொண்டேன் என்றும் கூறிய ராபின் உத்தப்பா ஒரு போட்டியில் எதிர்பாராதவிதமாக அவரிடமே ஸ்லெட்ஜ் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அவரிடம் அப்படி நடந்துகொண்டேன். ஆனால் அதை அவர் பெரிதாக நினைத்துக் கொண்டு 2-3 வருடங்களாக என்னிடம் பேசவே இல்லை என்று கூறியுள்ளார். அதன் பின்னர் எப்பொழுதும் போல சகஜமாக பேசினார் என்றும் செய்திகள் கூறி முடித்தார்.
அந்த சுற்றில் ஒரு டி20 போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றது. 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.