ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா இவர்களை எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள்! சம்பவம் செய்யப்போகிறார்கள்! மேத்யூ ஹைடன் ஓபன் டாக்!
ஐபிஎல் தொடரில் இந்த வருடம் வெளிநாட்டில் நடக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற தற்போது பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு உள்ள வித்தியாசமான மைதானங்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது .இந்த மூன்று மைதானங்களில் வித்தியாசமானவை
இந்திய மைதானங்களில் போல் ஒரே அளவைக் கொண்டது. அல்ல ஒவ்வொரு மைதானங்களும் வித்தியாச வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருக்கும். மைதானத்தின் அளவுகளும் மாறுபட்டுக் கொண்டிருக்கும். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ஆடுவது சற்று சிரமத்தை ஏற்படுத்தும். இருந்தாலும் இது மிகப்பெரிய போட்டித் தன்மையை உருவாக்கும்.
பந்துவீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையே உள்ள சமநிலையைப் புதுப்பிக்கும். மேலும், இந்த மைதானங்கள் அனைத்தும் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றவை என்று அந்த மைதானங்களில் இதற்கு முன்னர் ஆடிய பல சர்வதேச வீரர்கள் கூறியிருப்பதை நாம் கேட்டிருப்போம்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் மேத்யூ ஹைடன் இது பற்றி பேசியிருக்கிறார். எந்த எந்த பந்துவீச்சாளர்கள் இந்த ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடுவார்கள் என்பது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…
அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதுமே நமக்கு ஒரு ஆபத்தை தான் விளைவிப்பார்கள். புவனேஸ்வர் குமார் ஐபிஎல் தொடரில் மிகவும் நன்றாக விளையாடியிருக்கிறார். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியை எடுத்துக் கொண்டால் தற்போது கிரிக்கெட் உலகில் இருக்கும் மிகச்சிறந்த நேர்த்தியான வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு ஏற்ற இடத்தில் பட்டையை கிளப்பி விடுவார்கள் அதே நேரத்தில் வயதான வீரர்களும் சும்மா இருக்க மாட்டார்கள் ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் பல நூறு போட்டிகளில் விளையாடி விட்டார்கள்.
அவர்களிடம் அனுபவம் இருக்கிறது. அதேபோல் ரவீந்திர ஜடேஜாவும் எடுத்துக்கொள்ளலாம். இவர்கள் அனைவரும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்ப போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் மேத்யூ ஹைடன்.