ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் தனக்கு அச்சுறுத்தலாக இருந்த வீரர்களை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். இதில் வேஸ்ட் இண்டீசின் அம்ப்ரோஸ் மற்றும் இந்திய வீரர் ஹர்பஜன் இருவரும் தன் எனவும் கூறினார்.
2000ம் ஆண்டு துவக்கம் முதல் 2008 மற்றும் 09 வரை அசைக்க முடியாத அணியாக ஆஸ்திரேலியா அணி இருந்தது. அதில் முக்கிய பங்கு வகித்தவர் மேத்திவ் ஹைடன். ஆஸ்திரேலியா அணிக்காக துவக்க ஆதரராக இறங்கும் இவர் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பர். எளிதில் பவுண்டரிகள் சிக்ஸர்கள் அடிக்க கூடிய ஆட்டக்காரர்.
இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 1994 ம் ஆண்டு தனது முதல் போட்டியை ஆடினார். மொத்தம் 15 ஆண்டுகள் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடிய இவர், 103 டெஸ்ட் போட்டிகள், 161 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகள் ஆடியுள்ளார். அதன்பின் வயதின் காரணமாக அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன்பின் ஐபில் போட்டியில் பங்கேற்று சேன்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். இதில் இரண்டு வருடம் நீடித்த இவர் பின்பு இங்கிருந்தும் ஓய்வு பெற்றார். இப்பொழுது, முழுநேர வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார். இதன்மூலம் அனைவரையும் கவர்ந்தும் உள்ளார்.
இவர் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பெட்டியில் எனக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தவர்கலளில் ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னால் வேக பந்துவீச்சாளர் அம்ப்ரோஸ். இவர் நேர்த்தியாகவும், முதல் பந்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்த கூடியவர் எனவும் கூறினார். மேலும், இந்திய அணியின் சூழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் எனக்கு கடினமான போட்டியாக இருந்திருக்கிறார். இவர் எளிதில் பேட்ஸ்மேன்களை ஏமாற்றக்கூடியவர் எனவும் தெரிவித்தார்.
அம்ப்ரோஸ் அவர்கள் 1993ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா விற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் களை ஆட்டம் காண செய்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதை என்னால் மறக்கவே முடியாது என கூறினார். மேலும், நான் உடன் ஆடிய சிறப்பான பேட்ஸ்மேன் யார் என்றால் அது நிச்சயம் எனது கேப்டன் ரிக்கி பான்டிங் என கூறினார். எனக்கு எதிராக ஆடிய பேட்ஸ்மேன் களில் பிரைன் லாரா மறக்க முடியாதவர் என தெரிவித்தார்.