இந்த வருட ரஞ்சி டிராபியில் அற்புதமாக விளையாடி இருக்கிறார் மயங்க் அகர்வால். 2010ஆம் ஆண்டு நடந்த 19 வயதிற்கு உட்பட்டோர்கள் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடினாலும் அதன் பிறகு அவரது கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக தொடங்கவில்லை. அதன் பிறகு மூன்று வருடம் கழித்து தான் முதல்-நிலை கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார், ஆனால் பெரிய ஸ்கோர் எதுவம் அடிக்கவில்லை.
2015-16 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பையில் அனைத்தும் மாறியது, டெல்லி அணிக்கு எதிராக அவரது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அதற்கு அடுத்த சீசனில் ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்ததால், ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
2017-18இல் நடந்த ரஞ்சி டிராபி சீசனிலும் மோசமாகவே ஆரம்பித்தார் மயங்க் அகர்வால். ஆனால் மூன்றாவது போட்டியில் இருந்து விஸ்வரூபம் எடுக்க தொடங்கினார். மகாராஷ்டிரா அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் முச்சதம் அடித்து அசத்தினார். ஆனால் அரையிறுதி போட்டியில் அவர் நல்ல ஸ்கோர் அடிக்காததால், அவரது அணி விதர்பா அணியிடம் சரண் அடைந்தது.
நவம்பர் மாதத்தில் மயங்க் அகர்வால் 1033 ரன் அடித்து பட்டையை கிளப்பினார். இதனால் நவம்பர் மாதத்தில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை அகர்வால். நான்கு போட்டிகளில், 7 இன்னிங்சில் விளையாடிய அவர் 1033 ரன் அடித்து அசத்தினார். இதற்கு முன்பு நவம்பர் மாதத்தில் மட்டுமே அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை ஆண்டி பிளவர் (753 ரன் – 2000) வைத்திருந்தார்.
ஒவ்வொரு மாதத்திலும் அதிக ரன் அடுத்தவர்களின் பட்டியல் வருமாறு: