இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க தவம் கிடக்கும் மாயக் அகர்வால்
கர்நாடக மாநில அணியின் முக்கிய பேட்ஸ்மேனான மயான்க் அகர்வால், இந்தாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார். கர்நாடகாவின் சாம்பியன் பேட்ஸ்மேனாக கருதப்படும் அகர்வாலுக்கு வயது 27.
ஒரே ஆண்டில் ரஞ்சிக் கோப்பையில் 2,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.
இந்த நேரத்தில் ஒரு புதிய தொடக்கமாக கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகாக விளையாடு உள்ளார். கடந்த ஐ.பி.எல். சீசனில் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிக்காகவும் மயான்க் அகர்வால் விளையாடி உள்ளார். தொடக்க ஆட்டகாரராக அதிராடியாக ரன்களை சேர்க்கும் திறன் கொண்ட அகர்வால், கிங்கஸ் லெவன் பஞ்சாப் அணியின் பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மயான்க் அகர்வால் அண்மையில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஹைதராபாத்க்கு எதிராக 140 ரன்களும், மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 81 ரன்களும், இறுதிப் போட்டியில் சவுராஷ்ட்ரா அணிக்கு எதிராக 90 ரன்கள் எடுத்து கர்நாடக அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபியில் இவர் மொத்தம் விளையாடிய 8 போட்டிகளில் 3 சதம், 4 அரைசதம் உட்பட 723 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். இவரின் ரன் விபரம் 109, 84, 28, 102, 89, 140, 81 மற்றும் இறுதிப்போட்டியில் 90 ரன்கள்.
இவ்வளவு சிறப்பாக மாயக் அகர்வால் விளையாடியதால் அவர் முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி இடம்பிடிப்பார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர், ஆனால் ரசிகர்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. மேலும் இதன் காரணமாக பரவலாக பேசப்படுவது கிரிக்கெட்டிற்குள் அரசியல் மற்றும் பாகுபாடு இருக்கிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது.