உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடியது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது என மயாங்க் அகர்வால் கூயுள்ளார்.
இந்த அணியைக் காட்டிலும் நான் பெருமைப்படக் கூடிய வேறு அணி எதுவுமில்லை. கடந்த 12 மாதங்களாக அணியின் கலாசார கட்டமைப்பை உருவாக்கினோம். முதன்முறையாக கேப்டனாகியது முதல் இந்த முயற்சியை எடுத்தேன். இந்த அணியை வழிநடத்தியதே எனக்கு பெருமையானது. கேப்டனாக எனது சிறப்பான தருணம். உலகக் கோப்பையை வென்ற போது நான் இளம் வீரனாக இருந்தேன். அப்போது வெற்றியின் தன்மையை நான் உணரவில்லை. 2011 உலகக் கோப்பை வெற்றியை விட இத்தொடர் வெற்றி சிறப்பானது.
ஆஸி.க்கு மூன்று முறை நான் வந்து ஆடியுள்ளேன். இப்போது தான் எனக்கு புலப்படுகிறது. நாங்கள் சாதித்ததை வேறு எவரும் செய்யவில்லை. இந்த தொடர் வெற்றி நமது அணிக்கு புதிய அடையாளத்தை தரும். புஜாரா முன்பு இங்கு வந்ததை விட, இத்தொடரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். மயங்க் அகர்வாலையும் குறிப்பிட வேண்டும். பாக்ஸிங் டே டெஸ்டில் தனது இருப்பை வெளிப்படுத்தினார். அதே போல் இளம் வீரர் ரிஷப் பந்த்தும் சுயமாக எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
நமது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியதால், பெளலர்களும் அபாரமாக வீசத் தொடங்கினர். இத்தொடர் முழுவதும் இந்திய பெளலர்கள் தான் ஆட்டத்தின் போக்கையே தீர்மானித்தனர். முந்தைய தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களிலும் இதே நிலை தான். 4 பெளலர்களுடன் ஆடி அயல்நாடுகளில் வெற்றிகளை பெறுவது என்பது நான் கண்டிராத ஒன்று.