தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டுப்லஸ்ஸிஸ் பெஷாவர் சல்மி அணிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வருகிறார். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பாகிஸ்தான் லீக் தொடர் தற்பொழுது மீண்டும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டுப்லஸ்ஸிஸ் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் விடுத்துள்ளார். அவர் கூறிய வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
ஒரு ஆண்டுக்கு எத்தனை டி20 தொடர்கள் தான் நடத்துவது என்று கேள்வி எழுப்பியுள்ள டுப்லஸ்ஸிஸ்
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு டி20 தொடர் மட்டும் தான் நடந்து வந்தது. ஆனால் தற்பொழுது ஒரு ஆண்டிற்கு 4 முதல் 5 டி20 தொடர்கள் நடந்து வருகிறது. என்னைப் பொறுத்தவரையில் இதற்கான வரவேற்பு சர்வதேச அளவில் மிக அதிகமாக உள்ளது.
நிச்சயமாக இன்னும் சில ஆண்டுகள் கழித்து நாம் பார்த்தால் ஒரு ஆண்டுக்கு 7 முதல் 8 டி20 தொடர்கள் நடைபெறும். அப்படி நடைபெறும் பட்சத்தில் கிரிக்கெட் வீரர்கள் எப்படி சர்வதேச போட்டிகளில் தங்கள் நாட்டுக்காக பங்கேற்க முடியும்.
நிச்சயமாக சர்வதேசப் போட்டிகள் காணாமல் போக வாய்ப்பு உள்ளது
உதாரணத்திற்கு மேற்கிந்திய தீவுகள் அணியில் உள்ள சில சீனியர் வீரர்கள் அனைவரும் சர்வதேசப் தொடரில் மட்டும் தங்கள் நாட்டு அணிக்காக விளையாடி விட்டு பின்னர் ஓய்வு நாட்களில் உலக அளவில் நடைபெறும் அனைத்து டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதே நிலைமை தற்பொழுது தென் ஆப்பிரிக்கா அணியிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து உள்ளது.
இது காலப்போக்கில் அனைத்து அணிகளுக்கும் நடைபெற நிறைய வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து வீரர்களும் சர்வதேச தொடரில் மட்டும் பங்கெடுத்து விளையாடி விட்டு மீதமுள்ள அனைத்து நாட்களிலும் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து டீ20 தொடர்களிலும் விளையாட போகிறார்கள்.
இப்படி இது நடந்து விட்டால் நிச்சயமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காணாமல் போய்விடும். தற்போது ஃபுட்பால் விளையாட்டில் நடந்து கொண்டிருப்பது போல கிரிக்கெட்டிலும் நடைபெற நீண்ட காலம் ஆகாது என்றும் எச்சரித்துள்ளார்.
இவர் பேச்சுக்கு நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.