கேஎல் ராகுல் இப்படியொரு முட்டாள்தனம் செய்துவிட்டார்; கடுமையாக சாடிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

கேஎல் ராகுல் இப்படி ஒரு முட்டாள்தனத்தை செய்துவிட்டார் என்று கடுமையாக சாடியுள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

தென்னாபிரிக்க அணியுடனான முதல் ஒருநாள் போட்டியின் போது, இந்திய அணிக்கு முதல் முறையாக கேப்டன் பொறுப்பு வகித்தார் கேஎல் ராகுல். இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு, பவுமா மற்றும் வேன் டர் டசன் இருவரும் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். இவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். இப் போட்டியில் அறிமுகமான வெங்கடேஷ் ஐயர் ஆல்ரவுண்டர் ஆவர்.

கூடுதல் பந்துவீச்சு வாய்ப்பாக இருக்கும் என்று உள்ளே எடுத்து வரப்பட்டார். ஆனால் இவருக்கு பந்து வீசும் வாய்ப்பு இறுதிவரை கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க திணறிவந்த நிலையில் இவருக்கு ஏன் பந்துவீச வாய்ப்பு கொடுக்கவில்லை என்று பலரும் கேள்விகளை எழுப்பினர்.

இன்னிங்ஸின் இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 296 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்த முடியாமல் இந்திய அணி 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப்டன் பொறுப்பில் அனுபவம் இல்லை என்று கேஎல் ராகுல் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.

இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேஎல் ராகுல் மீது வைத்துள்ளார். “சஹல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்குள் வந்திருப்பதால், அவருக்கு 10 ஓவர்கள் கொடுக்க வேண்டுமென கேஎல் ராகுல் நினைத்திருக்கிறார். அவருக்கு விக்கெட்டுகள் விழவில்லை என்று தெளிவாக தெரிந்தது. பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி வைக்க விக்கெட் வேண்டும் என்று அவர் எண்ணவில்லை என இந்த முடிவில் இருந்தே தெரிகிறது. மேலும் கேப்டன் பொறுப்பில் போதிய அனுபவம் இல்லை என்றும் தெளிவாக தெரிகிறது.

சஹல் சரியாக பந்துவீசாதபொழுது, கூடுதல் பந்துவீச்சு வாய்ப்பாக வெங்கடேஷ் ஐயர் இருக்கிறார். அவர் குறைந்தபட்சம் 5-6 ஓவர்கள் வீசலாம். ஏன் கேஎல் ராகுல் இதனை முயற்சிக்கவில்லை என்று புரியவில்லை. சுழல் பந்துவீச்சை நன்றாக விளையாடி வந்த பவுமாவிற்கு, வெங்கடேச ஐயர் வந்திருந்தால், வேகப்பந்து வீச்சில் அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம். ராகுல் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக நான் நினைக்கிறேன்.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.