ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான 4வது போட்டியில் மார்னஸ் சதம் கடந்து அசத்தினார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இன்று துவங்கியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஹாரிஸ் இருவரும் சொற்ப ரன்னில் அவுட்டாகி பெவிளியன் திரும்பினார்கள். பின் மூன்றாவதாக களமிறங்கிய மார்னஸ் மற்றும் ஸ்மித் ஜோடி சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
ஸ்மித் மற்றும் மார்னஸ் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து 3-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்தனர். பின் எதிர்பாராதவிதமாக வாசிங்டன் சுந்தர் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து. அடுத்த ஓவரிலேயே இந்திய அணிக்கு மார்னஸை அவுட் செய்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது , சைனி வீசிய பந்தில் எட்ஜ் என்ற முறையில் அஜிங்கிய ரஹானே நோக்கி சென்ற பந்தை ரஹானே தவறவிட்டார். இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன் மார்கஸ் அதிரடியாக ஆடி சதத்தை கடந்தார்.
இதுபற்றி மார்னஸ் கூறியதாவது. ”நான் பேட்டிங் செய்யும்போது என்னிடமே நான் நிதானமாக இருக்கும் படி கூறிக் கொண்டேன், என்னை அறியாமலேயே சதத்தை அடித்த பின் ஆக்ரோஷமாக செயல்பட்டேன் என்று தெரிவித்தார்”.
பின் நடராஜன் வீசிய பந்தை அடிக்க முற்பட்டு எளிதாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார், இவர் சிறப்பாக செயல்பட்டு 204 பந்துகளுக்கு 108 ரன்களை எடுத்திருந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேமரான் க்ரீன் மற்றுண் டிம் பெய்ன் நிதானமாக ஆடி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றன.
87 ஓவர் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் 274/5 என நிலையில் முடிந்தது.