பெங்களூருக்கு அணிக்கு எதிராக நடக்கும் லீக் போட்டியில், கெய்ல் அடித்த பந்தை, மெக்கல்லம் சூப்பர்மேன் போல் பறந்து சென்று பிடித்தது வீணானது.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் 20வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.
முதலில் டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி பந்துவீச தேர்ந்தெடுத்தது. காயம் காரணமாக விளையாடாத ஏபி டி வில்லியர்ஸுக்கு பதிலாக மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்தார். குஜராத் லயன்ஸ் அணியில் ஆரோன் பின்ச், ஷிவில் கௌஷிக் மற்றும் தவால் குல்கர்னி அணிக்கு திரும்பினார்.
பெங்களூர் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் ஓவரில் இருந்தே அடித்து ஆடினார். கெய்ல் 38-ரன்னில் இருக்கும்போது ஜடேஜா வீசிய பந்தை .வாரி விட்டார். பவுண்டரியில் நின்று கொண்டிருந்த பிரண்டன் மெக்கல்லம், சூப்பர்மேன் போல் அதை தாவி பிடித்து கீழே விழுந்தார். ஆனால், அவர் தலையில் இருந்த தொப்பி பவுண்டரி கோட்டில் பட்டதை, ரீப்ளேவில் நடுவர் உறுதி செய்தார். இதனால் அதை சிக்ஸர் என நடுவர் கூறினார். மெக்கலமிடம் தப்பிய பசில் தம்பியிடம் LBW ஆனார். மெக்கல்லம் சூப்பர்மேன் போல் தாவி பிடித்த விடியோவை இங்கே காணுங்கள்: