அம்மா பஸ் கண்டக்டர்.. மகன் அண்டர்-19 ஸ்டார்! பட்டையை கிளப்பிய அதர்வா!

19 வயதுக்குட்டோருக்கான ஆசி யக் கோப்பை கிரிக்கெட் போட்டி யின் இறுதி ஆட்டத்தில் பேருந்து நடத்துநரின் மகனான அதர்வா அங்கோலேக்கர் 5 விக்கெட்களைச் சாய்த்து சாதனை படைத்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடை பெற்று வந்தது. இதன் இறுதி ஆட் டம் இந்தியா, வங்கதேச அணி களுக்கு இடையே நேற்று முன்தி னம் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இவரது சிறப்பான பந்துவீச்சால் 101 ரன்களில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது.

முதலில் விளையாடிய இந்திய அணி 32.4 ஓவர்களில் 106 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட் சமாக கரண்லால் 37 ரன்களும், கேப்டன் ஜுரேல் 33 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் விளையாடிய வங்க தேச அணி 101 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. இதனால் 5 விக்கெட் கள் வித்தியாசத்தில் 19 வயதுக் குட்பட்டோர் இந்திய அணி வெற்றி பெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர் அதர்வா அங்கோலேக்கர் சிறப்பாக பந்துவீசி 28 ரன்கள் கொடுத்து 5 முக்கிய விக்கெட்களைச் சாய்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இவரது சிறப்பான பந்துவீச்சால் 101 ரன்களில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது.

18 வயதாகும் அதர்வா, மும்பை யைச் சேர்ந்தவர். இவரது தந்தை பேருந்து நடத்துநராக இருந்தவர். அதர்வாவுக்கு 10 வயதாக இருக் கும் போதே அவர் காலமாகி விட்டார். இதைத் தொடர்ந்து பேருந்து நடத்துவர் பணி அதர்வாவின் தாய்க்கு வழங்கப் பட்டது. தற்போது அதர்வா, மும்பையிலுள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வருகிறார்.

இடது கை சுழற்பந்து வீச்சாள ரான அதர்வா, 19 வயதுக்குட்பட் டோர் ஆசியக் கோப்பை லீக் ஆட்டங்களிலும் சிறப்பாக பந்துவீ சினார். பாகிஸ்தான் அணிக்கெதி ரான ஆட்டத்தில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்களைச் சாய்த்தார். ஆப் கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது 16 ரன்களே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இறுதிப் போட்டிக்கு வந்தபின் னர் தனது அசத்தலான பந்துவீச்சின் மூலம் 5 விக்கெட்களைக் கைப் பற்றி வங்கதேசத்தைச் சுருட்டி னார். அவருக்குப் பக்கபலமாக ஆகாஷ் சிங் 3 விக்கெட்டும், வித்யாதர் பாட்டீல், சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Sathish Kumar:

This website uses cookies.