சச்சின் மற்றும் கோஹ்லியை வைத்து சம்பவம் செய்த ஆஸ்திரேலிய மக்கள்! இந்திய ரசிகர்கள் ஷாக்

சச்சின் மற்றும் கோஹ்லியை வைத்து சம்பவம் செய்த ஆஸ்திரேலிய மக்கள்! இந்திய ரசிகர்கள் ஷாக்

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் பெயரை ஆஸ்திரேலியாவில் தெருவிற்கு பெயராக வைத்து பெருமிதம் சேர்த்துள்ளனர் ஆஸ்திரேலிய மக்கள்.

இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத இருபெரும் வீரர்களாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் இருப்பார்கள் என்றால் அது சற்றும் மிகையாகாது. அவர்களின் பல சாதனைகள் இன்றளவும் அவர்களின் பெயரை உச்சரிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன.

கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கும் அளவிற்கு சச்சின் டெண்டுல்கர் தனது பேட்டிங் திறமையால் உயர்ந்திருக்கிறார். தற்போது அவரைப்போலவே விராட் கோலியும் பேட்டிங்கில் பல சாதனைகள் புரிந்து வருவதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் மாகாணத்திலுள்ள மில்டன் நகரில் மிகப் பெரிய எஸ்டேட் ஒன்றில்  உருவாகவிருக்கும் தெருக்களுக்கு கிரிக்கெட் உலகில் சாதனைகள் படைத்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களின் பெயர்களை வைக்க எஸ்டேட் நிறுவனம் முடிவு செய்தது.

அவற்றில், ஒரு தெருவிற்கு “டெண்டுல்கர் டிரைவ்” என்ற பெயரையும் மற்றொன்றிற்கு “விராட் கோலி கிரசன்ட்” என்ற பெயரையும் சூட்டி உள்ளனர். இதுகுறித்து  எஸ்டேட்டில்  டெவலப்பர் ஆக பணிபுரிந்து வரும் வருன் சர்மா என்பவர் கூறுகையில், “அனைவரின் வரவேற்பு பெற கிரிக்கெட் வீரர்களின் பெயரை வைக்க முடிவு செய்தோம். இந்தியாவில் இவர்கள் இருவரின் பெயரையும் பயன்படுத்தி திட்டமிட்டோம். அதற்கேற்ப பயன்படுத்தியபோது பலரிடமிருந்தும் பாராட்டுகளையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் சில இடங்களுக்கு வேறு சில கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் வைக்க திட்டமிட்டு இருக்கிறோம்.” என்றார்.

இதுபோன்று, தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள ஒரு தெருவிற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியின் பெயரை சூட்டியுள்ள சூட்டியுள்ளது குறிபிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.