மும்பை அணிக்கு கப்பை இப்பவே கொடுத்துடுங்க; ஆணித்தரமாக சொல்லும் முன்னாள் வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் கோப்பையை நிச்சயம் வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷான் டெய்ட் ஆணித்தனமாக கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குகிறது. இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக இந்தியாவில் இருந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் ஏற்கனவே துபாய் சென்று விட்டனர். சில முன்னணி வீரர்கள் சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கின்றனர்.

துபாயில் தனிமைப்படுத்துதல் முடிவடைந்த பிறகு இயல்புநிலை பயிற்சிக்கு அனைத்து வீரர்களும் திரும்பிவிட்ட நிலையில், யார் இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வெல்வது? என்கிற கணிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.

இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறுகையில், இந்த வருட ஐபிஎல் தொடரை பெங்களூரு அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தனது கருத்தினை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மற்றுமொரு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் யார் இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வெல்வது என்பது குறித்து பேசியிருக்கிறார்.

ஷான் டெய்ட் கூறுகையில், இந்த வருடம் ஐபிஎல் தொடரை நிச்சயம் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் என்றார்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மிகவும் வெற்றிகரமான அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. இதற்கு முன்னர் 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. ஷான் டெய்ட் கணிப்பின்படி, இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை மும்பை அணி வெற்றி பெற்றால் இது 5வது முறையாகும்.

இதுவரை இந்த ஒரு சாதனையை எவரும் படைத்திருக்கவில்லை. இதற்கு அடுத்த அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 முறை இறுதிப்போட்டி வரை சென்றிருந்தாலும் மூன்று முறை மட்டுமே கோப்பையை வென்று இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.