மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சான்ஸே இல்ல… இந்த 4 ஐபிஎல் அணிகள் பிளே-ஆப் போவது உறுதி – ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு!

இந்த நான்கு அணிகள் தான் 2023 ஐபிஎல் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்று கணித்துள்ளார் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்.

16வது ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக துவங்க உள்ளது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதுகின்றன.

கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு, இந்த ஐபிஎல் சீசனில் மீண்டும் பழைய முறைப்படி உள்ளூர் மைதானங்கள் மற்றும் வெளி மைதானங்கள் என போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் சில புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகிறது என்பதால், இந்த சீசன் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமில்லை என தெரிகிறது. ரசிகர்களும் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கடந்த சீசனில் முன்னணி அணிகளாக பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பிடித்து பெரிதளவில் ஏமாற்றினர். கடந்த சீசன் கொரோனா தொற்று பரவல் காரணமாக குறிப்பிட்ட சில மைதானங்களுக்குள் நடைபெற்றது. ஆனால் இம்முறை சொந்த மைதானங்களில் நடைபெறுவதால் மும்பை, சென்னை அணிகள் கூடுதல் பலத்துடன் காணப்படுகின்றன.

இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசன் குறித்து பலரும் பல கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். எந்தெந்த அணிகள் பிளே-ஆப் செல்லும்? யார் அதிக ஸ்கோர் அடிப்பார்? யார் அதிக விக்கெட் கைப்பற்றி, பர்பிள் கேப் வாங்குவார்? என்ற கணிப்புகள் தொடர்ச்சியாக நிலவி வருகிறது.

கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணியுடன் இணைந்து விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித், இந்த வருடம் ஏலத்தில் எந்த அணியிலும் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்த வருடம் ஐபிஎல் சீசனில் கமெண்ட்டரி செய்கிறார். முதல் முறையாக கமெண்ட்ரிக்கு அறிமுகமும் ஆகிறார்.

ஸ்மித், எந்த நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார். அதில் ஆச்சரியப்படும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி இடம் பெறவில்லை. இது குறித்து அவர் பேசியதாவது:

“எனது கணிப்பின்படி, தோனி ஆரம்பம் முதலே கேப்டனாக ஆடுகிறார். சென்னையிலும் போட்டி நடக்கிறது என்பதால் சிஎஸ்கே அணி கட்டாயம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் பலம்மிக்கதாக காணப்படுகிறது. அந்த அணியும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

கேஎல் ராகுல் கேப்டனாக இருந்து வரும் லக்னோ அணி பேட்டிங் பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர்கள் என பேலன்ஸ் கொண்ட அணியாக இருக்கிறது. அவர்களும் பிளே-ஆப் செல்வர் என்று எண்ணுகிறேன். இவர்களுக்கு மத்தியில் மிகவும் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இருக்கிறது. அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு வருவதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். கட்டாயம் வரும் என்றும் எண்ணுகிறேன். என நான்கு அணிகளை குறிப்பிட்டு தனது கணிப்பு முன்வைத்தார்.

Mohamed:

This website uses cookies.