ஆஸ்திரேலியா வீரரான கிறிஸ் லின்னை ஜானி சின்ஸ் என்று அழைத்து இருக்கிறார் க்ருனால் பாண்டியா.
இந்நியாவில் தற்போது 14வது ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது. முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணி மோதியதில் பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியதில் டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்நிலையில், முதல் போட்டியில் விளையாடிய மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 159 ரன்கள் குவிக்க இதை துரத்தி களமிறங்கிய பெங்களூர் 160 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் கிறில் லின் மும்பை அணிக்காக தனது முதல் போட்டியை விளையாடினார். இவர் மும்பை அணிக்காக 2020 சீசனிலே ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஆனால் இவர் அந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஏன்னென்றால் டாப் ஆர்டரில் டீகாக், சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருந்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது டீகாக் பதிலாக இவருக்கு முதல் போட்டியிலயே வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட கிறிஸ் லின் 35 பந்தில் 49 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இந்நிலையில், கிறிஸ் லின் பெரும்பாலும் அடல்ட் திரைப்பட நட்சத்திரமான ஜானி சின்ஸுடன் ஒப்பிடப்படுகிறார். ஏன்னென்றால் இவர்கள் இருவரும் வழுக்கை தலையுடன் இருக்கின்றனர். கடந்த 10ம் தேதி கிறிஸ் லினுக்கு பிறந்தநாள் என்பதால் மும்பை வீரர்கள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
அப்போது க்ருனால் பாண்டியா அவரை வாழ்த்தும் போது ஜானி சின்ஸ் என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார். மற்ற வீரர்களும் அவரை ஜானி சினஸ் என்றே கூறியிருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டரில் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.