ஐபிஎல் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி, மூன்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி நாளைய போட்டியிலாவது தோல்வியிலிருந்து மீளுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 14-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதற்குமுன் நடைபெற்ற மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றிலும் தோல்வியையே தழுவியுள்ளது.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 1 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 1 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவியது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதியது. 194 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தப் போதிலும் பந்துவீச்சு மோசமாக உள்ளதாக காரணத்தினால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 1 போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இரண்டாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது. இதில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. எனவே நாளை நடக்க இருக்கும் போட்டி இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாயந்தது. குறிப்பாக் நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதியவைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு அணிகளிலும் பெரிய மாற்றங்கள் இருக்காது என தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் நாளை தனது சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன் என பொல்லார்டு கூறியுள்ளார்.
இதுகுறித்து பொல்லார்டு கூறுகையில் ‘‘நான் எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன். என்னை பொருத்த வரையில் மிகப்பெரிய வீரர்களுக்கு எதிரான ஆட்டத்தை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொள்வேன்.
ஒரு வீரராக எதிரணி எப்படி பட்டது, உங்களுக்கு எதிராக எப்படி செயல்பட இருக்கிறார்கள் என்பதை யோசித்து அதற்கு ஏற்றபடி கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டும். நாளைய போட்டி அணிக்கு மட்டுமல்ல, எனக்கும் சக்சஸ்புல் போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
ஒருவேளை நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தால்,