டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச தீர்மாணித்துள்ளது! சித்தேஷ் அறிமுகம், மும்பைக்கு பொல்லார்ட் கேப்டன்!

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச தீர்மாணித்துள்ளது

கிங்ஸ் XI பஞ்சாப் : லோகேஷ் ராகுல் , கிறிஸ் கெய்ல், கருன் நாயர், சர்ஃபராஸ் கான், டேவிட் மில்லர், மன்டிப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் , சாம் குர்ரான், ஹார்டஸ் விலோஜன், முகமது ஷமி, அங்கிட் ராஜ்பூட்

மும்பை இந்தியன்ஸ் : சித்தீஷ் லேட், குவின்டன் டி காக் , சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கிருஷ்ண பாண்டியா, கியோன் பொலார்ட்  ஹார்டிக் பாண்டியா, ராகுல் சாஹார், அல்ஜார்ரி ஜோசப், ஜேசன் பெஹ்ரண்டோர்ப், ஜாஸ்ரிட் பம்ரா

 

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி,2 தோல்விகளுடன் 6 புள்ளிகள்பெற்றுள்ளது. அதேவேளை யில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. இரு அணிகளும் இந்த சீசனில் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த 30-ம் தேதி மொஹாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பைஅணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோற்கடித்திருந்தது. இதற்கு தனது சொந்த மண்ணில் இன்றுமும்பை அணி பதிலடி கொடுக்க முயற்சிக் கக்கூடும். மும்பை அணி தனது கடைசி இரு ஆட்டங்களில் நடப்பு சாம்பியனான சென்னை அணியையும், கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த ஹைதராபாத் அணிகயையும் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.

இந்த இரு வெற்றிகளிலும் மும்பை அணியின்பந்து வீச்சாளர்கள் பிரதான பங்கு வகித்தனர். அதேவேளையில் பேட்டிங்கில் இறுதிக்கட்ட ஓவர்களில் கெய்ரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டையை சுழற்றுவது பெரிய பலமாக உள்ளது. சென்னை அணிக்கு எதிராக விளையாடும்போது ஹர்திக் பாண்டியா, பொலார்டு ஜோடி கடைசி இரு ஆட்டங்களில் 45 ரன்களை விளாசியிருந்தது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பொலார்டு 26 பந்துகளில் 46 ரன்கள் விளாசியிருந்தார். அவரது அதிரடியால்தான் அந்த ஆட்டத்தில் கடைசி 5 ஓவர்களில் 61 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தது. எனவே இன்றைய ஆட்டத்திலும் ஹர்திக் பாண்டியா, பொலார்டு கூட்டணி பஞ்சாப்அணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்கக்கூடும். இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக விளையாடும் மும்பை அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்சீரற்ற வகையில் உள்ளது. இந்த சீசனில் அதிகரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதல் 20இடங்களுக்குள் மும்பை அணியை சேர்ந்த ஒருவர் கூட இல்லை. இதனால் டாப் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்துவதில் அந்த அணி கவனம் செலுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளது.

பந்து வீச்சை பொறுத்தவரையில் மும்பை அணிபலமாகவே உள்ளது. ஹைதராபாத் அணிக்குஎதிரான ஆட்டத்தில் 136 ரன்களே சேர்த்த போதிலும் அறிமுக வீரராக களமிறங்கிய அல்ஸாரி ஜோசப் 12 ரன்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி மிரளச் செய்திருந்தார். அந்த ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றியை வசப்படுத்தியிருந்தது.

வான்கடே ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாகதமாக இருக்கும் என்பதால் ஜஸ்பிரித் பும்ரா, ஜேசன் பெஹ்ரன்டார்ப், ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் அல்ஸாரி ஜோசப்பும் அசத்த காத்திருக்கிறார். பஞ்சாப் அணி நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை தோற்கடித் திருந்தது. 151 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி ஒரு பந்து மீதம் இருக்கையில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது. இந்த சீசனில்3 அரை சதங்களுடன் 217 ரன்கள் சேர்த்துள்ள கே.எல்.ராகுல், 2 அரை சதங்களுடன் 184 ரன்கள்சேர்த்துள்ள மயங்க் அகர்வால் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். கிறிஸ் கெயில், டேவிட் மில்லர் ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம்அதிகரிக்கும். பந்து வீச்சில் அஸ்வின், சேம் கரன், மொகமது ஷமி ஆகியோர் சவால் தரக்கூடும்.

Sathish Kumar:

This website uses cookies.