சாம்பியன் பட்டம் இல்லை… ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட மும்பை இந்தியன்ஸ் அணியால் வர முடியாது; அடித்து சொல்லும் பிரபல பயிற்சியாளர் !!

சாம்பியன் பட்டம் இல்லை… ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட மும்பை இந்தியன்ஸ் அணியால் வர முடியாது; அடித்து சொல்லும் பிரபல பயிற்சியாளர்

2023 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 5 முறை டைட்டில் பட்டத்தை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2023 ஐபிஎல் தொடர் மிகவும் மோசமான ஒன்றாக அமைந்தது என்றே கூறலாம்.

மற்ற பலம் குறைந்த அணிகள் எல்லாம் தோல்வி அடைந்தாலும் கடைசி வரை போராடி தோல்வி அடைகிறது. ஆனால் அனுபவம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்துமே மிகவும் மோசமாக உள்ளது.குறிப்பாக மும்பை அணியில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திர வீரர்களும் இந்த வருடம் மிக மோசமாகவே விளையாடி வருகின்றனர்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்தும் அந்த அணியில் இருக்கும் பிரட்சனை குறித்தும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி., இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாம் மூடி தெரிவித்ததாவது., “நான் ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு கூறியது போலவே இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நெருங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும், மும்பை இந்தியன்ஸ் அணியில் பல ஓட்டைகள் உள்ளது, ஒரு அணியாக அந்த அணி சமபலம் வாய்ந்த அணியாக தெரியவில்லை”.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அல்லது வெளிநாட்டின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் கிடையாது, மேலும் வெளிநாட்டு வீரர்களும் பேலன்ஸாக கிடையாது, மேலும் அந்த அணியில் பல பவர்ஹிட்டர்கள் இருந்தாலும் அவர்களுக்கு எட்டாவது இடத்தில் தான் இடம் கொடுக்க முடியும், குறிப்பாக நடந்து முடிந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான ஆட்டம் தெரிந்தது, அவர்களுடைய அனுபவம் எங்கே போய்விட்டது..? என்ற கேள்வி இதன் மூலம் எழுகிறது” என்று மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து டாம் மூடி தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் (8/04/2023)சனிக்கிழமை இந்திய ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Mohamed Ashique:

This website uses cookies.