6, Wd, 4, 1, 4, 6, 4Nb, 4… ஒரே ஓவரில் 31 ரன்கள்… சொந்த டீமுக்கே சூனியம் வைத்த அர்ஜுன் டெண்டுல்கர்! – பஞ்சாப் 214 ரன்கள் குவிப்பு!

போட்டியின் 16ஆவது ஓவரில் 31 ரன்கள் வாரிக்கொடுத்து ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார் அர்ஜுன் டெண்டுல்கர். அதன்பிறகு வரிசையாக சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விளாசி 214 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இம்முறை துவக்க வீரர்களாக ஷாட் மற்றும் பிரப்சிமரன் இருவரும் களமிறங்கினர். ஷாட் 11 ரன்களுக்கு அவுட் ஆனார்.

பிரப்சிம்ரன் 26 ரன்கள் அடித்திருந்தபோது, அர்ஜுன் டெண்டுல்கர் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அதர்வா 17 பந்துகளில் 29 ரன்களுக்கு அவுட் ஆகினார். பேட்டிங்கில் தடுமாறிய லிவிங்ஸ்டன் 12 பந்துகளில் 10 ரன்களுக்கு வெளியேறினார்.

5ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் மற்றும் ஷாம் கர்ரன் இருவரும் மும்பை பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர். இந்த ஜோடி 48 பந்துகள் 92 ரன்கள் சேர்த்தது.

ஹர்ப்ரீத் சிங் 28 பந்துகளில் 41 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்த ஷாம் கர்ரன் அரைசதம் அடித்தார். பின்னர் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உட்பட 55 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அடுத்து உள்ளே வந்த ஜித்தேஷ் சர்மா, வந்தவுடன் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து ஆரம்பித்தார். நான்கு சிக்ஸர்கள் உட்பட 7 பந்துகளில் 25 ரன்கள் அடித்துக்கொடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இப்போட்டியில் 15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெடுகள் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அர்ஜுன் டெண்டுல்கர் இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

போட்டியின் 16ஆவது ஓவரை அர்ஜுன் டெண்டுல்கர் வீசினார். அதில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 31 ரன்கள் விளாசியது ஷாம் கர்ரன் மற்றும் ஹர்ப்ரீத் சிங் ஜோடி. இந்த இடத்தில் தான் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. கடைசி ஐந்து ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 96 ரன்கள் குவித்தது.

15 ஓவர்களில் 118/4 இல் இருந்து 16ஆவது ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து, அதுவரை மந்தமாக விளையாடி வந்த பஞ்சாப் அணியை தூண்டிவிட்ட அர்ஜுன் டெண்டுல்கர் மீது தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Mohamed:

This website uses cookies.