என்னப்பா லுச்சா தனமா பேசுற..? கிளார்க்குக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீகாந்த்

ஐபிஎல் போட்டியில் பணம் அதிகமாக கிடைப்பதால் விராட் கோலி அணி வீரர்களிடம் ஆஸி. வீரர்கள் வார்த்தைப் போரில் ஈடுபடவில்லை என்ற கிளார்க்கின் கருத்துக்கு ஸ்ரீகாந்த் பதில் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியில் எதிரணி வீரர்களுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டு அவர்களின் கவனத்தை திசைதிருப்புவதில் வல்லவர்கள். ஆஷஸ் தொடர், இந்தியாவுக்கு எதிரான தொடரில் இதை மிகப்பெரிய அளவில் பார்க்கலாம்.

ஆனால் ஐபிஎல் போட்டி வந்த பிறகு இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் அடிபணிந்து செல்கிறார்கள். இதனால் ஸ்லெட்ஜிங் செய்ய தயங்குகிறார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்திருந்தார்.

PERTH, AUSTRALIA – DECEMBER 17: Virat Kohli of India and Tim Paine of Australia bump into each other during day four of the second match in the Test series between Australia and India at Perth Stadium on December 17, 2018 in Perth, Australia. (Photo by Cameron Spencer/Getty Images)

இதற்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன், வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஸ்லெட்ஜிங்கால் ஜெயிக்க முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஸ்ரீகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் ‘‘வெறும் ஸ்லெட்ஜிங்கை மட்டுமே வைத்து நீங்கள் போட்டியை ஜெயிக்க முடியாது. ஆஸ்திரேலியாவின் தோல்வி தோல்விதான். அவருடைய கருத்து கேலிக்கூத்தானது என்று சொல்வேன்.

நீங்கள் நசீர் ஹுசைன் அல்லது சர் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற அனுபவ வீரர்களிடம் கேட்டால் ஸ்லெட்ஜிங்கால் ஒருபோதும் ரன்கள் அடிக்க முடியாது, விக்கெட்டுகள் வீழ்த்த முடியாது என்று சொல்வார்கள்.

நீங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். விக்கெட்டுகள் வீழ்த்த சிறப்பாக பந்து வீச வேண்டும். டார்கெட்டை எட்ட சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். என்னுடைய கருத்தின்படி ஸ்லெட்ஜிங் உதவியாக இருக்காது’’ என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.