கிரிக்கெட் வீரர்கள் மட்டும் இழிச்சவாயனுங்களா? புட்பால், கூடைப்பந்து வீரர்கள் கோடிகளில் சம்பாதிக்கனும், கிரிக்கெட் வீரர்கள் நாட்டுக்காக மட்டுமே விளையாடனும்னா எப்படி? – ஐபிஎல்-க்கு ஆதரவு தெரிவித்த உலகக்கோப்பை வென்ற ஜாம்பவான்!

“கால்பந்து, கூடைப்பந்து வீரர்கள் எல்லாம் கோடிகளில் சம்பாதிக்கும்பொழுது, கிரிக்கெட் வீரர்கள் மட்டும் ஏன் பணம் சம்பாதிக்கக்கூடாது? அவர்களும் சம்பாதிக்கட்டும்! ஐபிஎல் அதில் முக்கியமாக இருக்கிறது. அதே நேரம் சொந்த நாட்டின் கிரிக்கெட்டையும் வீழவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.” என்று நேர்த்தியான கருத்தை தெரிவித்திருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிளைவ் லாய்டு.

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியது 1983 ஆம் ஆண்டு முதல்முறையாக இந்திய அணி உலக கோப்பையை வென்றது தான். அதன்பிறகு தான் உலகில் உள்ள பலரும் இந்திய கிரிக்கெட் மீது கவனம் செலுத்த துவங்கினர்.

அப்போது இருந்து இந்திய அணி பலமுறை சரிவை கண்டிருந்தாலும், எந்த வகையிலும் துவண்டுவிடவில்லை. மீண்டும் 2011ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக உலககோப்பையை தோனி தலைமையிலான இந்திய வென்றது. வரிசையாக பல்வேறு கோப்பைகளையும் கைப்பற்றியது.

1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனை பிசிசிஐ வித்தியாசமாக கொண்டாடி வருகிறது. அப்போது 1983ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இருந்த ஜாம்பவான் கிளைவ் லாய்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதன்பிறகு சமகாலத்தில் வீரர்கள் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் விளையாடுவது குறித்தும் அவர் நேர்த்தியான கருத்தை பகிர்ந்து கொண்டார். ஐபிஎல் முக்கியத்துவம் பற்றி பேசியது பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது. ஜாம்பவான் கிளைவ் லாய்டு பேசியதாவது:

“எங்களது காலத்து கிரிக்கெட் வீரர்களை விட இப்போது இருப்பவர்களுக்கு அவர்களது மதிப்பு நன்றாகவே தெரிகிறது. இதற்கு ஐபிஎல் போன்ற போட்டிகள் பெரிய உதவியாக இருந்திருக்கிறது. இதேபோல் அடுத்து வரும் வீரர்களுக்கும் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு அதிகாரிகள் பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் தங்களது சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்துகிறார்கள். அதற்கேற்ற பணத்தை பெறுகிறார்கள். கால்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் பல முன்னணி வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதை எந்தவித கேள்வியும் எழுப்பாமல் பாராட்டுகிறீர்கள். ஆனால் கிரிக்கெட் வீரர்களை மட்டும் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று குற்றம் சொல்கிறீர்கள். இது எந்த வகையில் சரியாக இருக்கும் இவர்களும் சம்பாதிக்கட்டும். அவர்களை விடவா கிரிக்கெட் வீரர்கள் சம்பாதித்து விட்டார்கள். அதேநேரம் கால்பந்து, கூடைப்பந்து வீழ்ச்சி அடைந்துவிட்டதா?.

சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்களின் நாடுகள் வீழ்ச்சி அடையாமல் அங்கேயும் பார்த்துக்கொள்ள வேண்டும். 20 வீரர்கள் இருக்கும் நாட்டில் 10 வீரர்கள் இதுபோன்று லீக் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தினால் மீதமிருக்கும் 10 வீரர்களை வைத்து எப்படி கிரிக்கெட்டை வளர்க்க முடியும்? அந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் அணி வீழ்ச்சி அடைந்துவிடும். அது மட்டும் நடக்காமல் பார்த்துக் கொண்டால் போதும். மற்றபடி வீரர்கள் ஏன் சம்பாதிக்க கூடாது? நல்ல வாழ்வை வாழக்கூடாது? அதில் எந்த தவறும் இல்லை.” என்றார்.

 

Mohamed:

This website uses cookies.